Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
கும்பகோணத்தில் அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க அலுவலர் மது போதையில் தள்ளாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவுத்துறை 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை கொண்டாடியது. மாவட்ட அளவிலான விழா உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கும்பகோணம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் மற்றும் கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது தஞ்சாவூர் கூட்டுறவு சங்க அலுவலர் செல்வராஜன் என்பவர் மது போதையில் மேடையில் தள்ளாடியபடி இருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்ட சக கூட்டுறவு ஊழியர்கள் மேடையில் இருந்து அவரை அப்புறப்படுத்தி அங்கிருந்து அறைக்குள் அடைத்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் இருக்கும் மேடையிலேயே மது போதையில் தள்ளாடியவாறு நின்றிருந்த அதிகாரியால் அங்கு இருந்தவர்கள் முகம் சுளித்தனர்.





















