Varunkumar IPS Profile | திருச்சியின் எல்லைச்சாமி!சம்பவக்காரன் வருண் IPS..REAL சிங்கம் சூர்யா!
கள்ளச்சாரயம், கட்டபஞ்சாயத்து, விபச்சாரம், ரவுடியிசம் என போன் வர வர அந்த பிரச்னைகளுக்கு மாவட்ட போலீசார் மூலமாக உடனுக்குடன் தீர்வு கண்டு
ரியல் லைஃப் சிங்கம் சூர்யா போல் வலம் வருகிறார்.தற்போது ஒட்டுமொத்த திருச்சியும் இவர் கண்ட்ரோலில் தான்..யார் இந்த வருண்குமார் ஐபிஎஸ்?
வருண்குமார் வீரசேகரனான இவர் ராமநாதபுரத்தை பூர்விகமாக கொண்டவர். எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்த இவர் பல் மருத்துவ படிப்பை முடித்திருந்தாலும் காவல்துறையின் மீது கொண்ட பற்று காரணமாக 2010ல் UPSC தேர்வு எழுதினார். அதில் ஆல் இந்தியா டாப் 3 ரேங்க் பெற்றாலும், விருப்பத்தின் பேரில் ஐபிஎஸ் ஐ தேர்வு செய்தார். 2011ல் ஐபிஎஸ் ட்ரெயினிங் முடிந்து அருப்புக்கோட்டையில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார்.
உதவி காவல் கண்காணிப்பாளரில் இருந்து ப்ரொமோஷன் பெற்று காவல் கண்காணிப்பாளராகி ராமநாதபுரம், சென்னை, மதுரை, ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு யூடியூபர் சாட்டை துரைமுருகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து அதிரடி காட்டினார்.
திருச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி பொறுப்பேற்றார் வருண்குமார் ஐ.பி.எஸ்.
பதவியேற்றதும் அவர் செய்த முதல் காரியம் பொதுமக்கள் எந்த தயக்கமும் இன்றி நேரடியாக எஸ்.பியை தொடர்புகொண்டு புகார் கொடுக்க பிரத்யேக தொலைபேசி எண்ணை அறிவித்ததுதான்.
அவர் நம்பர் கொடுத்த முதல் நாளில் இருந்து வருண்குமாருக்கு வந்தது தொடர் அழைப்புகள். கள்ளச்சாரயம், கட்டபஞ்சாயத்து, விபச்சாரம், ரவுடியிசம் என போன் வர வர அந்த பிரச்னைகளுக்கு மாவட்ட போலீசார் மூலமாக உடனுக்குடன் தீர்வு கண்டார். ஒவ்வொரு புகாரையும் வழக்கு விசாரணை முடியும் வரை தன்னுடைய நேரடி கண்காணிப்பில் வைத்துக்கொண்டார் வருண்குமார். அதன் விளைவாக திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சட்ட விரோத செயல்கள் பெரும் அளவு குறையத் தொடங்கின.
சைரன் வைத்த காரில் அலுவலகம் வந்துவிட்டு அங்கிருந்தே பணிகளை பார்த்துச் செல்லும் பாணிக்கு பதில், வழக்கு சம்பந்தப்பட்ட இடத்திற்கு தானே நேரடியாக விசிட் அடித்து வழக்கை துரித்தப்படுத்தும் முயற்சியை எடுத்தார் வருண்குமார். நள்ளிரவில் கூட திருச்சி மாவட்ட காடுகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடிப்படையாக வைத்து, அவரே நேரடியாக காடுகளுக்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தினார். கிராமங்களின் தெருக்களுக்கு சென்று மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கினார். அவர் கொடுத்த எண்ணுக்கு ஒரு சின்ன புகார் வந்தாலும் அதனை விசாரிக்க மாவட்ட எஸ்.பியே களத்தில் இறங்கிப்போனதை பார்த்த சக போலீசார் ஆடித்தான் போனார்கள்.
போலீசாரே நெருங்க முடியாத அளவிற்கு திருச்சி மாவட்டத்தில் சில ரவுடிகள் அட்டாகாசம் செய்து வந்தனர். அப்படிப்பட்ட ஒருவர்தான் கொம்பன் என்ற ரவுடி ஜெகன். அவரது என்கவுண்டரும் வருண்குமாரின் க்ரெடிட் லிஸ்டிலேயே சேரும்..
திருச்சி வருண்குமார் கண்ட்ரோல் என்றால் புதுக்கோட்டை இவரது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸின் கண்ட்ரோல் எனலாம்.. இந்த ips தம்பதி பல குற்றங்களில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பவர் கபுலாகவும் வலம் வருகின்றனர்..