Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து முக அழகிரி மகன் துரை தயாநிதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவர் காரில் சென்ற போது அவரை படமெடுத்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
முன்னாள் மத்திய அமைச்சரும் முதல்வர் மு.க ஸ்டாலினின் சகோதருமான மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி. தொழில்அதிபராகவும் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான துரை தயாநிதி கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அனுஷாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு வேதாந்த், ருத்ர தேவ் என இருமகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி துரை தயாநிதி அழகிரி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. திடீரென வீட்டில் மயங்கி சரிந்து விழுந்த அவரை உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதைத்தொடர்ந்து அவருக்கு மூளையிலுள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 3 மாத கால சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி அழகிரி, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை முக அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். சித்தப்பா ஸ்டாலினும் இருமுறை நேரில் வந்து துரை தயாநிதியை நலம் விசார்த்து சென்றார்.
சிஎம்சி மருத்துவமனையில் ஏ பிளாக்கில் துரை தயாநிதி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல் நலம் தேறிய துரை தயாநிதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சிஎம்சி மருத்துவமனையில் இருந்து துரை தயாநிதி இன்று காலை 10.30 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் குடும்பத்தினர் துரை தயாநிதியை காரில் அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவமனையில் இருந்து வெளியேறிய துரை தயாநிதியை படம் எடுக்க விடாமல் செய்தியாளர்கள், ஒளிப்பதியாளர்கள் மீது மருத்துவமனை ஊழியர்கள் தாக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அதோடு அழகிரியே பத்திரிக்கையாளர்களின் போனை பறிக்க வந்ததாக கூறப்படுகிறது.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.