Dheeraj Kumar IAS : அமுதா இடத்துக்கு வந்த IAS..ஸ்டாலினின் நேரடி சாய்ஸ்யார் ! இந்த தீரஜ் குமார்?
அடுத்தடுத்த கொலைகள், கள்ளச்சாராய மரணம் என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்கட்சிகள், திமுகவை பந்தாடி வரும் நிலையில் இந்த விவகாரம் ஸ்டாலின் காதுகளுக்கு செல்ல, நடவடிக்கை என்று வந்துவிட்டால், ஐஏஎஸ், ஐபிஎஸ் என தனித்தனி ஸ்கேல் எல்லாம் கிடையாது, அனைவரும் சமம் தான் என்று சொல்லும் வகையில் அமுதா ஐஏஎஸ்-ஐ மாற்றிவிட்டு, புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் ஐஏஎஸ்-ஐ நியமித்துள்ளார் ஸ்டாலின். இப்படிப்பட்ட சூழலில் தீரஜ் குமாரின் இடமாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பீகார் மாநிலம் பாட்னாவை பூர்வீகமாக கொண்ட தீரஜ்குமார், 1993 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவில் தேர்வாகி தமிழ்நாட்டில் பணியை தொடங்கினார். 2004 இல் சேலம் தொழில்துறை மேலாண் இயக்குனராக மாற்றப்பட்ட அவர் 2011 முதல் 2017 வரை மத்திய அரசில் பணிபுரிந்தார். 2017 இல் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்த தீரராஜ்குமார் இளைஞர் நலன் மேம்பாடு விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றினார். pஇன் திமுக அட்சிக்கு வந்த பிறகு 2021-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். 2023-ஆம் ஆண்டு வணிக வரித்துறை செயலாளராக பணியமர்த்தப்பட்டார். இது போன்று தமிழக அரசின் முக்கிய பொறுப்புகளில் சிறப்பாக பணிபுரிந்து வந்தவர் தான் தீரஜ்குமார். தற்போது தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக இருந்த திருவோத்குமார் உள்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இப்படி பல்வேறு துறைகளில் பணியாற்றிய திராஜ்குமார் கண்டிப்பான அதிகாரி தனக்கு கொடுக்கப்பட்ட துறைகளில் அரசியல் பார்க்காமல் வேலை செய்யக்கூடியவர் என்கிறார்கள் அரசு வட்டாரத்தில். தீரஜ் குமாருக்கும் போலீசாருக்கும் இடையே சமூகமான போக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தில் கொலை குறித்த குற்ற சம்பவங்கள் குறையுமா போலீசார் காண அடிப்படை பிரச்சனை தீர்க்கப்படுமா என பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறைக்கு தீரஜ்குமாரை நியமிக்கப்பட்டிருப்பதை காவல்துறை மூத்த அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். தனக்கு கொடுக்கப்பட்டுள்ள துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த தீரஜ்குமாரை உள்துறை செயலாளராக நியமிக்க முதலமைச்சர் ஸ்டாலினின் சாய்ஸ் என கூறப்படுகிறது.