Vikravandi school child : குழந்தை உயிரிழந்த விவகாரம்”இறப்பில் சந்தேகம் இருக்கு” 3 பேர் கைது!
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி செப்டிக் டேங்கில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நள்ளிரவில் போலீசார் 3 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மெயின் ரோடு பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணிபரியும் பழனிவேல் சிவசங்கரி இவர்களின் தம்பதி மூன்று வயது குழந்தை லியோ லட்சுமி எல்கேஜி படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த நிலையில் மதியம் வகுப்பறை அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்துள்ளார். செப்டிக் டேங்கில் சுற்றி அமைக்கப்பட்ட வேலி தரமற்ற முறையில் இருந்துள்ளது. மேலும் செப்டிக் டேங்க் மூடி சேதம் அடைந்து பாதுகாப்பற்ற முறையில் இருந்ததால் குழந்தை தவறிவிழுந்துள்ளது. இதனைக் கண்ட மற்ற குழந்தைகள் அலறி அடித்துக் கொண்டு கொண்டு ஆசிரியர்களிடம் தெரிவித்த நிலையில் ஆசிரியர்கள் விக்கிரவாண்டி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பள்ளிக்கு வந்த தீயணைப்பு துறையினர் குழந்தையை சடலமாக மீட்டுள்ளனர். குழந்தை செப்டிக் டேங்கில் மூச்சுத் திணறலால் உயிரிழந்த சம்பவம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் குழந்தையின் உயிர் பறிபோய்விட்டதாக குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர். மேலும் விக்கிரவாண்டி பகுதி மக்கள் பள்ளி முதல்வரை கைது செய்ய வேண்டும் என சொல்லி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளியின் தாளாளர் எமில்டா பள்ளி முதல்வர் டொமில்லா மேரி வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோரை நள்ளிரவில் விக்கிரவாண்டி போலீசார் கைது செய்தனர்.