Asra Garg IPS: ’மக்கள் புகாருக்கு ஒழுங்கா நடவடிக்கை எடுங்க’ போலீசாருக்கு தண்டனைகளை அடுக்கிய ஐஜி அஸ்ரா கார்க்
Asra Garg IPS: காவல் நிலையத்தில் உள்ள அனைவருக்கும் இது பற்றிய விழிப்புணர்வு அவசியம். 1930 குறித்த விழிப்புணர்வு அவசியம். புகார் மனுக்களை விசாரிப்பது அவசியம். இருதரப்பிலும் அழைத்து, ஆவணங்கள் தேவைப்பட்டால், சரிபார்த்து முறையாக விசாரிக்கப் பட வேண்டும். அவ்வாறு செய்தாலேயே பல புகார்கள் விசாரணை நிலையிலேயே தீர்வு காணப்படும். காவல்துறையில் கூட்டணி அமைக்காமல், பாரபட்சம் இல்லாமல் காவலர்களுக்கு பணி வழங்க வேண்டும். ஓய்வும் முறையாக வழங்கப்பட வேண்டும். அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். காவல்துறையினரிடம் ஏதேனும் தகவல், புகார்கள் இருப்பின் என்னிடம் தெரிவிக்கலாம். வாட்சப்பில் அனுப்பலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.





















