மேலும் அறிய

Madurai Child kidnap : இறப்புக்கு முன் முதல்வருக்கு கடிதம்.. IAS அதிகாரியின் மனைவி பகீர்

மதுரையில் குழந்தை கடத்தலில் தொடர்பு இருப்பதாக தேடப்பட்டு வந்த IAS அதிகாரியின் மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மேலும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சூர்யா தனது சாவிற்கு நீதி கிடைக்க வேண்டும்  எனது ஆத்மா ஸ்டாலின் ஐயா உதயநிதி அண்ணாவை வாழ்த்தும் என குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரையில் 11 ஆம் தேதி தனியார் பள்ளியில் படித்து வரும் பள்ளி மாணவன் ஆட்டோ ஓட்டுனருடன் கடத்தப்பட்டார். இருவரையும் கடத்திய கும்பல் சிறுவனின் தாயார் மைதிலி ராஜலட்சுமிக்கு வீடியோ கால் செய்து துப்பாக்கி வைத்து கொண்டு மிரட்டி 2 கோடி ரூபாய் பணம் கேட்டுள்ளனர். உடனே தன்னை மிரட்டிய ஆடியோவுடன் காவல் நிலையத்தில் மைதிலி புகார் அளித்தார்.

செல்போனை வைத்து ட்ராகி செய்த காவல்துறை 3 மணி நேரத்தில் கடத்தல் கும்பல் இருப்பிடத்திற்கு சென்றது, ஆனால் அதற்கு முன்பே மாட்டிகொள்வோம் என்பதை உணர்ந்த அக்கும்பல் சிறுவனையும், ஆட்டோ ஓட்டுனரையும் செக்கானூரணி அருகே கின்னமங்கலம் பகுதியில் இறக்கி விட்டுவிட்டு தப்பி சென்றனர்.

இந்நிலையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்திய போலீஸ் கடத்தலில் ஈடுபட்ட தேனி மாவட்டம் போடியை சேர்ந்த முன்னாள் காவலர் செந்தில்குமார், அப்துல் காதர், வீரமணி காளிராஜ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி இச்சம்பவத்தில் ஐஏஎஸ் அதிகாரி ரஞ்சித் என்பவரது மனைவி சூர்யா மற்றும் ஹைகோர்ட் மகாராஜன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கடத்தல் நடைபெற்றதாகவும் இவர்களுக்கும் மைதிலி ராஜலட்சுமி என்பவருக்கும் ஏற்கனவே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததால் குழந்தையை கடத்த கூறியதாக குற்றவாளிகள் போலீசாரிடம் தெரிவித்தனர் அதன் பெயரில் காவல்துறையினர் சூர்யா மற்றும் ஹைகோர்ட் மகாராஜன் என்பவரை முக்கிய குற்றவாளியாக வழக்கில் சேர்த்து தேடி வந்தனர்.

இந்நிலையில் 10 நாட்கள் ஆக தலைமறைவாக ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா குஜராத்தில் தன்னுடைய கணவருக்கு வழங்கப்பட்டுள்ள ஆட்சியர் குடியிருப்பு வளாகத்திலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் சூர்யாவின் தாய், தனது மகள் இறப்பிற்கு காரணம் மைதிலி ராஜலட்சுமி தான், தனது மகளிடம் உள்ள சொத்தை அபகரித்து தற்போது தற்கொலைக்கு தூண்டியதாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தின் கண்ணீருடன் புகார் அளித்தார்.

இந்நிலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சூர்யா, இறப்பதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில் 

எனது பெயர் சூர்யா என்றும் மதுரையில் கடந்த 11-ஆம் தேதி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. தனக்கும் அந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை..! 

அதில் சம்பந்தப்பட்டவர்களை நான் இதுவரை பார்த்தது கூட இல்லை. என்னை ஏன் இவ்வழக்கு சம்பந்தப்படுத்தினார் ராஜலட்சுமி என புரியவில்லை..! 

என்னை இவ்வழக்கில் தொடர்பு படுத்தி வெளியான செய்திகளில் பார்த்து அறிந்தேன். அவரது கணவருக்கும் எனக்கும் தொடர்பு உள்ளதால் நான் பணம் கேட்டேன் என் பச்சை பொய் புகார் ராஜலட்சுமி கொடுத்துள்ளார்.!

அவரது கணவர் பெயர் கூட எனக்குத் தெரியாது. கடந்த ஆண்டு ஐ-கோர்ட் மகாராஜன், ராஜலட்சுமியிடம் மிகவும் நெருங்கி பழகியவர் அவர் மூலமாகத்தான் எனக்கு ராஜலட்சுமி அறிமுகமானார். அவர் வீட்டிற்கு தான் ராஜலட்சுமி அடிக்கடி வருவார் அவர்கள் இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் வட்டி தொழில் உள்ளது. ராஜலட்சுமி வட்டி தொழில் செய்பவர் என்று கடிதத்தில் இறந்து போன சூர்யா குறுப்பிட்டுள்ளார்.

இருவரும் நெருங்கி பழகிய நேரத்தில் ஒன்றாக இணைந்து காளவாசல் ஹெரிடேஜ் ஹோட்டல் மற்றும் ராஜா வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவார்கள். கடந்த ஆண்டு ராஜா பெயரில் கேஸ்கள் உள்ளது. அது எனக்கு தெரியவந்ததும் அவர் ஊரை விட்டு சென்றார்கள். 

சிறிது காலம் கழித்து ராஜலட்சுமி தன்னிடம் ஐ-கோர்ட் மகாராஜா 60 லட்சம் தன்னிடம் கடன் வாங்கியதாக ராஜலட்சுமி சொன்னார் அது எனக்குத் தெரியாது என நான் கூறினேன்.? அதற்கு ராஜலட்சுமி எனக்கு தெரியாது மகாராஜா ஓடிவிட்டார் நீ தான் எனக்கு பணம் தர வேண்டும் இது குறித்து எனது கணவரிடம் சொல்வேன் என டார்ச்சர் செய்தார். 

நான் பயந்து கொண்டு கணவரிடம் கூறவேண்டாம் என கூறு நான் தருகிறேன் என ஒப்புக்கொண்டேன், ஐ-கோர்ட் மகாராஜன் அந்தப் பணம் எனது ரெஸ்டாரண்டை கட்டுவதற்காக வாங்கப்பட்டது என ராஜலட்சுமி சொன்னதால் நானே அந்த பணத்தை தருகிறேன் எனசொன்னேன்.

அதன் பின்பு சிறிது காலம் கழித்து எனக்கு பணம் தேவைப்பட்டதால் ராஜலட்சுமியிடம் பணம் கேட்டேன் அதற்கு அவர் உனக்கு சொந்தமான பைபாஸ் சாலையில் உள்ள காம்ப்ளக்ஸ் அடமான கடனாக வைத்து பணம் தருகிறேன் என கூறி 15 லட்சம் கடனாக ராஜலட்சுமியிடம் வாங்கினேன். அதற்கு வட்டி எடுத்துக்கொண்டு தான் பணத்தை கொடுத்தார்.

ஒருவர் (ஐ-கோர்ட் மகாராஜன்) ஜெயிலில் இருந்து தப்பியதால் அவரிடம் நான் பழகிய பாவத்திற்கு என்னை எல்லாவற்றிலும் எனது பெயரை இழுத்தார்கள். அவர் தப்பித்த சம்பவத்தன்று நான் அந்த ஊரிலே இல்லை. ஆனால், எனது பெயர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து, ராஜலட்சுமி என்னிடம் மாகராஜன் வாங்கிய 60 லட்சம் மற்றும் நான் வாங்கிய 15 லட்சத்திற்கு பணம் கேட்டு டார்ச்சர் செய்தார்.

நான் எனது காம்ப்ளக்ஸ் எழுதித்தருகிறேன் என கடந்த ஏப்ரல் மாதம் கூறி பதிந்து கொடுத்தேன் அதுவும் அவருக்கு போதவில்லை.? மகாராஜா பெற்ற கடன் ஒரு வருட வட்டியுடன் வேண்டுமென தொடர்ச்சியாக கேட்க ஆரம்பித்தார். ராஜலட்சுமி கைப்பட எழுதிய வட்டி நோட் என்னிடம் உள்ளது எனவும் மரண கடிதத்தில் குறுப்பிட்டுள்ளார்.

பணம் கேட்டு டார்ச்சர் செய்ததுடன் மட்டுமல்லாமல் ராஜலட்சுமி தன்னுடைய மாமன் மகன் என ஒருவரை அழைத்து வந்தார் அவர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு கணவரும் குடும்பத்தினரும் ஆதரவில்லை என தெரிந்து கொண்ட அவர்கள் 60+15 லட்சம் பணத்திற்கு 1.35  கோடியை வட்டியும் முதலுமாக தர வேண்டும் என டார்ச்சர் செய்தது மட்டுமல்லாமல் நான் எழுதிக் கொடுத்த காம்ப்ளக்ஸ் வெறும் 80 லட்சம் தான் போகும் மீதம் பணத்தை கொடுத்தாக வேண்டும் என தொடர்ச்சியாக ஏமாற்றினார்கள். நான் அவர்களிடம் இது என்னுடைய அப்பா எனக்கு கொடுத்தது.

யாரோ வாங்கிய கடனுக்கு ஏற்கனவே விளாத்திகுளத்தில் இருந்த சொத்தை இருபது லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்து அந்த சொத்தையும் இழந்து விட்டேன் என ராஜலட்சுமி மற்றும் அவர் அழைத்து வந்த மாமன் மகனிடமும் அழுததாகவும், அதற்கும் அவர்கள் மனம் மாறவில்லை என இறந்து போன சூர்யா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனது சித்தப்பாவிடம் நடந்ததை கூறியதாகவும், அதற்கு இறந்து போன சூர்யாவின் சித்தப்பா வேறு ஒருவருக்கு விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் அதில் அவர்களது கடனை அடைத்து விடலாம் என்று கூறினார். அதை வைத்து இந்த இடத்தை வேறு ஒருவர் நல்ல லாபத்திற்கு வாங்கினால் எனக்கு தருவீர்களா என அடமான பத்திரத்தை கேட்டேன்.! அதற்கு மைதிலி ராஜலட்சுமி 1.35 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் பியூட்டி பார்லரை எனக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என கூறினார்.

இது பகல் கொள்ளை என்று கூறினேன்.! ராஜாவிடம் பழகிய பழக்கத்தினால் குடும்பம் மரியாதை போனது, கணவரும் பிரிந்தார். இதனால் வெளியூர் செல்ல திட்டமிட்டேன். பெங்களூரு சென்று சமையல் கலைஞராக ஆக வேண்டும் என நினைத்து படிக்க சென்று கையில் வைத்த பணத்தை வைத்து பீஸ் கட்டினேன். 

தொடர்ந்து ராஜலட்சுமி பார்லரை என்னிடம் இருந்து பரித்துக்கொள்ள 4.5 லட்சத்தை கொடுத்து என்று எழுதி வாங்கியதாகவும், பார்லர்க்கான மீதம் பணத்தை மூன்று மாதத்தில் 35 லட்ச ரூபாய் திருப்பி தருவதாக ராஜலட்சுமி ஒப்புக்கொண்டார். ஆனால் பணத்தை தரவில்லை, தொடர்ச்சியாக 1. 35 கோடி ரூபாய்க்கு உன்னுடைய காம்ப்ளக்ஸ் வெறும் 80 லட்சம் தான் போகும். மீதம் பணத்தை கொடு என்று தொடர்ச்சியாக டார்ச்சர் செய்தார்.

நான் ராஜலட்சுமி இடம் எனது பியூட்டி பார்லரை எனக்கு திருப்பித் தாருங்கள் எனக்கு சோறு போடு யாரும் இல்லை.? என்னுடைய வாழ்க்கையை அதுதான் என்று கேட்டிருந்தேன்.

இந்த பார்லரை வைத்தும், என்னிடம் வாங்கிய பணத்தை ஏமாற்றுவதற்காக எனது பெயரினை சிறுவன் கடத்தல் வழக்கில் ராஜலட்சுமி சேர்த்தார் ஐயா.! 

கடத்தலில் ஈடுபட்டவர்கள் முகம் கூட எனக்குத் தெரியாது.? பெயர் தெரியாது.? வேண்டும் என்றால் என்னுடைய செல்போன் உரையாடலை சோதித்துப் பாருங்கள்.? 

நான் எப்படி ரவுடியிடம் பழகி இருக்க முடியும்.? இதில் நான் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் நீங்கள் எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.? 

பணம் தராமல் ஏமாற்றுவதற்கு செத்துப்போன மைதிலி ராஜலட்சுமி புருஷனுடன் என்னை தொடர்புபடுத்தி சொல்லி இருக்காங்க.! அது உண்மை குறித்து அவரிடம் கேட்க முடியாது.? ஏனென்றால் அவர் இறந்து போனார்.

அதுபோல ஹை கோர்ட் மகாராஜன் ஜெயிலை விட்டு ஓடிப் போனது பிறகு ராஜலட்சுமி இடம் தொடர்பில் இருந்தார். ராஜலட்சுமியை பார்க்க கடந்த ஏப்ரல் 20 முதல் 25 வரை அவர் வீட்டிற்கு அடிக்கடி மகாராஜா வந்தார்..! அது குறித்து சிசிடிவியை ஆய்வு பண்ணினால் உண்மை தெரியும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜலட்சுமி கணவருக்கும் எனக்கும் தொடர்பு இருந்தால் ஒருமுறை கூடவா எனது செல்போனில் அவர் பேசியிருக்க மாட்டார்..?

கடந்த வருடம் எனது செல்போனை செக் செய்து பாருங்கள்...? 

குழந்தை கடத்தல் எவ்வளவு பெரிய குற்றம்..? என்று எனக்கு தெரியும்.! இரண்டு குழந்தை எனக்கும் இருக்கு..! குழந்தையை பிரிந்து வாழும் வலி எனக்குத் தெரியும்..! 

ஐயா நான் தவறை திருத்தத்தான் நான் படித்து CHEF ஆக வேண்டும்.... 

பின்பு எனது கணவர் எனது நன்னடத்தையை பார்த்து மன்னித்து ஏற்றுக் கொள்வார் என்றும் உரை விட்டு போனேன்..!

ஐயா நான் குழந்தை கடத்தலில் செய்ததற்கு ஆதாரம் வேண்டும்.?

இன்று எனது கணவர் பெயர், எனது புகைப்படம் டிவியில் வந்துள்ளது. நாளை நான் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால் எனது மானம் எனது கணவர் மானம் பெயர் திரும்ப கிடைக்குமா..? ஐயா.! என்றாவது சேர நினைத்த எனது வாழ்க்கை திரும்பக் கிடைக்குமா..? நீதி வேண்டும்..!

ஸ்டாலின் ஐயா..! உங்கள் ஆட்சி நான் பார்த்து வருகிறேன் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்....! ஆனால் உங்கள் வீட்டு பெண்ணாக இருப்பினும் என்னை என்றாவது ஒருநாள் சூர்யா நிரபராதி என்று மேடையில் ஸ்டாலின் ஐயா மற்றும் உதயநிதி பிரதர் சொல்லுங்கள்..!

எனது சாவு எனது ஆத்மா ஸ்டாலின் ஐயா உதயநிதி அண்ணாவை வாழ்த்தும்..! எனது கணவர் ரொம்ப நல்லவர்..! அவரையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளுங்கள்...! எனது குழந்தை இடம் உனது தாய் கொஞ்சம் நல்லவள் என்று கூறுங்கள்....

ஐயா உங்களை நம்பித்தான் நான் போகிறேன்...

அப்பா... ஜிஞ்சூ .... டிட்டு.... ரஞ்சித் லவ் யூ... லவ் யூ... சாரி... சாரி....

இதை செய்த ராஜா வந்து உண்மையை சொன்னால் தான் தெரியும் BY சூர்யா.

செய்திகள் வீடியோக்கள்

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MP
Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MP
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024:  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
Breaking News LIVE 18th DEC 2024: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024:  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
Breaking News LIVE 18th DEC 2024: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
Men Mentality: புரிஞ்சுக்கோங்கமா..! கதறும் கணவன்மார்கள், விடாமல் அடிக்கும் மனைவிகள் - ஆண்களிடம் இல்லாத திறன்கள்
Men Mentality: புரிஞ்சுக்கோங்கமா..! கதறும் கணவன்மார்கள், விடாமல் அடிக்கும் மனைவிகள் - ஆண்களிடம் இல்லாத திறன்கள்
Embed widget