Beer Bottle Fight : மது பாட்டிலில் குழப்பம் - சினிமாவை மிஞ்சிய Beer Bottle சண்டை! kallakurichi | Villupuram | Fight
கள்ளக்குறிச்சி அருகே மது போதையில் இரண்டு இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்கிக் கொள்ளும் பதைபதைக்கும் சம்பவம் நடந்துள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள புக்கிரவாரி புதூர் பகுதியைச் சேர்ந்த கருப்பன் என்பவருடைய மகன் நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுநரான ராஜா வயது (30) என்பவர்!
மது அருந்துவதற்காக அருகிலுள்ள வரதப்பனூர் கிராம டாஸ்மாக் வைன்ஷாப் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வரதப்பனூர் கிராமத்தை சேர்ந்த கணபதி என்பவருடைய மகன் ராமதுரை (எ) கோகுல் வயது (26) என்ற கட்டிட பொறியாளரும் அங்கு மது அருந்த வந்துள்ளார். ராஜாவும் ராமதுரை(எ) கோகுலும் ஏற்கனவே மதுபோதையில் இருந்த சூழலில் இவர்கள் இருவரும் மேலும் பீர் பாட்டில்களை வாங்கிக் கொண்டு மது அருந்த சென்றபோது, இருவரும் தாங்கள் கையில் வைத்துள்ள பீர் பாட்டில் யார் யாருடையது என்ற குழப்பத்தில், இது என்னுடையது இது உன்னுடையது என இருவரும் அங்கு உள்ள சாலையின் நடுவே பீர் பாட்டிலை வைத்து தகராறு செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் ராஜா தன்னிடம் இருந்த ஒரு பீர் பாட்டிலை தரையில் போட்டு உடைத்ததுவிட அதைக்கண்ட ராமதுரை(எ) கோகுல் தன்கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை ராஜாவின் முகத்தில் ஓங்கி அடித்துள்ளார். இந்த சம்பவத்தில் ராஜா சுருண்டு விழுந்து நினைவு இழந்துள்ளார். இதன்பிறகு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கள்ளக்குறிச்சியில் இருந்து 108 ஆம்புலன்சை வரவழைத்து காயம்பட்ட ராஜாவை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற ராஜா மேல் சிகிச்சைக்காக தற்போது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமான புகாரில் சின்னசேலம் போலீசார் ராஜாவை பீர் பாட்டிலால் தாக்கிய வரதப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் கட்டிட பொறியாளர் ராமதுரை(எ) கோகுல் மீது நடவடிக்கை மேற்கொள்ள விசாரணை செய்து வருகின்றனர். நேற்று ஆடி பதினெட்டாம் பண்டிகையையொட்டி மது அருந்துவதற்காக வந்த ராஜாவும், ராமதுரை(எ) கோகுலும் மது போதையில் தகராறு செய்து பின்பு ராஜாவை ராமதுரை (எ) கோகுல் பீர் பாட்டிலால் முகத்தில் தாக்கி படுகாயம் அடைய செய்துள்ள பதைபதைக்ககும் சம்பவம் நடந்து, அது சம்பந்தமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.