மேலும் அறிய

Vijay Sangeetha Divorce: அரசியல் நாகரிகம் எங்கே? மெளனம் காக்கும் விஜய்... மாதர் சங்கம் சரமாரி கேள்வி

தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் சங்கீதாவை குறிவைத்து,ஆபாசமான,இழிவான ஆணாதிக்க சமூக வலைதள வன்முறை பதிவுகள், கேலிச்சித்திரங்கள் போன்றவற்றை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய் இணையர் சங்கீதா மீது, தவெக தொண்டர்களின் சமூக வலைதள தாக்குதலையும் அதை கண்டிக்காமல் மௌனம் காக்கும் விஜய்க்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

தனிப்பட்ட சட்ட நடைமுறை

 நடிகர் விஜய்,தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, பொது வாழ்வில் நேரடியாக செயல்பட்டு வருகிறார். இந்தச் சூழலில், விஜய்யின் இணையர் சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில், விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது ஒரு தனிப்பட்ட சட்ட நடைமுறை ஆகும்.

அது இரு நபர்களுக்கும், நீதிமன்றத்திற்கும் உரிய விஷயமே தவிர, அதை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தி, ஆபாசமாக விவாதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

ஆணாதிக்க  வன்முறை பதிவுகள்

ஆனால், விஜய்யின் பெயரைச் சொல்லிக் கொண்டு இயங்கும் அக்கட்சியின் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் சங்கீதாவை குறிவைத்து,ஆபாசமான,இழிவான ஆணாதிக்க சமூக வலைதள வன்முறை பதிவுகள், கேலிச்சித்திரங்கள் போன்றவற்றை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.

இது கருத்துச் சுதந்திரமல்ல – பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை. பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை – பொது சொத்து அல்ல ஒரு பெண், தனது திருமண வாழ்க்கை தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது, அப் பெண்ணை அவமதிக்கவோ, கேலி செய்யவோ, பாலியல் இழிவுக்கு உள்ளாக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. விவாகரத்து என்பது, அடிப்படை மனித உரிமை என்பதை மறந்து, பெண்களை இழிவுபடுத்தும் போக்கு, ஆழமான ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடாகும்.

மறைமுக ஒப்புதலா விஜய்?

திரைப்பட நடிகராக இருப்பது ஒரு தனிப்பட்ட தொழில். ஆனால் அரசியல் கட்சி தொடங்கி, மக்களிடம் ஆதரவு கோரும்போது, அந்த நபர் பொது வாழ்வின் நெறிமுறைகளுக்கு உட்பட்டவராக மாறுகிறார். இந்த நிலையில், விஜய்யின் பெயரை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்துவது குறிப்பாக சங்கீதாவை ஆபாசப்படுத்தி பதிவுகள் பரவும்போது அதை கண்டிக்காமல் விஜய் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது. அந்த மௌனம், அந்த செயல்களுக்கு மறைமுக ஒப்புதலாகவே பார்க்கப்படும்.

எனவே ரசிகர்கள் என்ற பெயரில் நடைபெறும் இந்த ஆணாதிக்க சமூக வலைதள வன்முறையை வெளிப்படையாகவும், தெளிவாகவும் கண்டிக்க வேண்டும். இது ஒரு அரசியல் கட்சி தலைவரின் அரசியல் – சமூக பொறுப்பு. இத்தகைய வலைதள வன்முறைக்கு மௌனம் காப்பதும் குற்றத்திற்குச் சமமானதாகும்.

தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும்

சங்கீதா மீது சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் ஆணாதிக்க சமூக வலைதள வன்முறை, ஆபாச, இழிவான தாக்குதல்களை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது.

பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல்–பொழுதுபோக்கு விவாதமாக மாற்றும் போக்கை எதிர்க்கிறது. பொது வாழ்வில் இருப்பவர்கள், பெண்களை இழிவுபடுத்தும் செயல்களுக்கு எதிராக தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

ரசிக மன நிலைக்கு பலி

பெண்களின் மரியாதை, சமத்துவம், சுதந்திரம் ஆகியவை எந்த அரசியல் ஆதரவுக்கும், ரசிக மன நிலைக்கு பலியாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளை தடுத்து நிறுத்த காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
 
 சங்கீதா மீது ஆபாச அவதூறு பரப்புபவர்கள் மீது தவெக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இந்த ஆபாச பிரச்சாரத்தை கண்டித்து எதிர்வினை ஆற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மாமியார் - மருமகள் தகராறு ; டீ போட மறுத்ததால் அரிவாளால் வெட்டி கொலை !! அதிர்ச்சி சம்பவம்
மாமியார் - மருமகள் தகராறு ; டீ போட மறுத்ததால் அரிவாளால் வெட்டி கொலை !! அதிர்ச்சி சம்பவம்
வீடு, மனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை !! வழக்கறிஞர், ஆவண எழுத்தர் யாருக்கு முக்கியத்துவம் ?
வீடு, மனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை !! வழக்கறிஞர், ஆவண எழுத்தர் யாருக்கு முக்கியத்துவம் ?
விபத்தில் பறிபோன பிஞ்சு உயிர்! கருவிலேயே கலைந்த மற்றொரு கனவு - திருப்பத்தூரில் நெஞ்சை உருக்கும் துயரம்
விபத்தில் பறிபோன பிஞ்சு உயிர்! கருவிலேயே கலைந்த மற்றொரு கனவு - திருப்பத்தூரில் நெஞ்சை உருக்கும் துயரம்
TN Election 2026: அச்சக உரிமையாளர்களே! - தேர்தல் ஆணையத்தின் புதிய ரூல்ஸ்... கலெக்டர் வார்னிங்!
TN Election 2026: அச்சக உரிமையாளர்களே! - தேர்தல் ஆணையத்தின் புதிய ரூல்ஸ்... கலெக்டர் வார்னிங்!
Advertisement
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
தேனி வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேர்தல் ஆணையத்தின் அசத்தல் முயற்சி!
தேனி வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேர்தல் ஆணையத்தின் அசத்தல் முயற்சி!
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
LPG Ships Reach India: அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
Embed widget