Nitish Kumar |"SPEAKER பதவி எனக்கு தான்”பாஜகவின் GAME STARTS..நிதிஷ்-க்கு வைக்கும் செக்
முதலமைச்சர் பதவி கூட வேணாம், ஆனால் சபாநாயகர் பதவிய விட்டுக் கொடுக்க மாட்டோம் என பாஜக தலைமை நிதிஷ்குமாரிடம் முரண்டு பிடிப்பதாக சொல்கின்றனர். எதிர்காலத்தில் நிதிஷ்குமார் கூட்டணி மாறி ஆட்சியை கலைக்க முடியாத அளவுக்கு செக் வைக்கும் வகையில் பக்கா ப்ளானுடன் இறங்கியுள்ளது பாஜக.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளை தட்டிச் சென்று அபார வெற்றி வெற்றது. இந்த கூட்டணியில் உள்ள பாஜக 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி ராம்விலாஸ் கட்சி 19 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5 தொகுதிகளிலும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
எத்தனை கூட்டணி மாறினாலும் சிஎம் இருக்கையில் அவரை தவிர யாரும் இருக்கக் கூடாது என்பதுதான் நிதிஷ்குமாரின் டார்கெட். இந்த முறையும் பாஜகவை விட குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. மத்தியிலும், பீகாரிலும் பாஜக ஆட்சியமைப்பதற்கு நிதிஷ்குமார் உதவி தேவை என்பதால் பாஜகவும் CM இருக்கையை விட்டுக் கொடுத்துள்ளதாக சொல்கின்றனர்.
ஆனால் சபாநாயகர் பதவிக்கு 2 கட்சிகளும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. கடந்த நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியின் போது பாஜகவை சேர்ந்த நந்த் குமார் யாதவ் சபாநாயகராகவும், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நரேந்திர நாராயன் யாதவ் துணை சபாநாயகராகவும் இருந்தனர். இந்த முறை அதே இடத்தை பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் குறிவைத்துள்ளன.
சட்டசபையில் அதிகாரமிக்க பதவியாக இருப்பது சபாநாயகர் இருக்கை. சட்டசபையை நடத்துவது, மசோதாக்களை நிறைவேற்றுவது, சட்டசபையை கூட்டுவது பற்றி முடிவெடுப்பது என சகல அதிகாரமும் சபாநாயகர் பதவியில் இருக்கிறது. மிக முக்கியமாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் போது சபாநாயகரின் கைகளில் தான் பவர் இருக்கிறது. பாஜக இந்த பதவிக்கு குறிவைப்பதற்கான முக்கியமான காரணமும் அதுதான். ஆட்சியமைத்த பிறகு நிதிஷ்குமார் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு எதிர் கூட்டணி பக்கம் தாவ விரும்பினால் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதற்கு சபாநாயகர் பதவியை கைவசம் வைத்திருக்க வேண்டும் என பாஜக தலைமை கணக்கு போட்டுள்ளது. சட்டசபையை கூட்டுவதும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் போது வாக்கெடுப்பு நடத்துவதும் சபாநாயகரிடம் தான் இருக்கிறது.
கடந்த தேர்தல் போல் இல்லாமல் இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவை நெருக்கி 85 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதனால் யாருடன் சேர்ந்தாலும் ஐக்கிய ஜனதா தளத்தால் ஆட்சியமைக்க முடியும் என்பதால் எப்போது வேண்டுமானாலும் பாஜகவை மிரட்டும் வகையில் எப்போது வேண்டுமானாலும் உறவை முறித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒரு நிலைமை வந்தால் ஐக்கிய ஜனதா தளத்திற்கு செக் வைக்கும் வகையில் சபாநாயகர் பதவியை வாங்கி விட வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறது பாஜக.





















