Dibrugarh train accident : தடம் புரண்ட ரயில்! உ.பி-யில் பரபரப்பு! யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேசத்தில் பயணிகளுடன் சென்ற சண்டிகர் - திப்ரூகர் ரயில் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் சண்டிகர் - திப்ரூகர் ரயிலானது தடம் புரண்டு, விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 முதல் 12 பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. ரயில் விபத்து சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, அப்பகுதியில் பயணிகளை மீட்கும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் முழுமையாக ரயில் சேவையானது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை செய்யுமாறும் அதிகாரிகளுக்கு, அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை உடனடி உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
இச்சம்பவம் குறித்து, வடகிழக்கு ரயில்வேயின் சிபிஆர்ஓ பங்கஜ் சிங் கூறுகையில், " இந்த விபத்தானது மதியம் 2.37 மணியளவில் நடந்தது. முதற்கட்ட தகவலின்படி, 4 முதல் 5 பெட்டிகள் வரை தடம் புரண்டன.. ரயில்வேயின் மருத்துவ வாகனமானது சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியை துவங்கியுள்ளது. மேலும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன..