மேலும் அறிய

''லஞ்சம் ஊழல் NO EXCUSE'' சாட்டை சுழற்றும் விஜய் அதிகாரிகள் 6 பேர் SUSPEND

லஞ்சம் ஊழல் செய்தால் இனி NO EXCUSE என்ற முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் லஞ்சம் வாங்கிய புகாரில் 4 உயர் அதிகாரிகள் உட்பட 6 மாநகராட்சி அதிகாரிகள் பணியிடை நீக்கம் மீது சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை பாயும் எனவும் மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.

ஊழல் இல்லா தமிழகம் என்ற முழக்கத்துடன் ஆட்சியை தொடங்கியது தவெக அரசு. சமீபத்தில் கரூரில் நடைபெற்ற முதல்வர் விஜய் யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாதுனு சொல்லிருங்க உங்க பின்னாடி நான் இருக்கேன் என மக்களிடம் பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து அரசு அதிகாரிகளுக்கும் துறை ரீதியாக கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் இந்த மாதத்தில் 6 அதிகாரிகள் மீது லஞ்சம் வாங்கியதற்காக நடவடிக்கை பாய்ந்துள்ளது.லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காண்ட்ராக்டர்கள் உள்ளிட்டோர் சமர்பித்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரூ. 9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வாங்கியதாக போலி ரசீதுகளைச் சமர்ப்பித்த, மணலி மற்றும் மாதவரம் மண்டல சுகாதார அதிகாரி டாக்டர் தேவிகலா கடந்த ஜூலை 9 தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர் ஒருவரிடமிருந்து ₹6 லட்சம் வாங்கியதற்காக, ஷெனாய் நகரிலுள்ள மண்டல துணை ஆணையர் அலுவலகத்தின் முதுநிலை பூச்சியியல் வல்லுநர் சிவ பொற்கொடி ஜூலை 11 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வாங்கிய லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதாக சிவ பொற்கொடி கூறிய நிலையிலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டிட உரிமையாளரிடம் ₹2.5 லட்சம் லஞ்சம் கேட்டதற்காக, மாதவரம் மண்டல உதவி செயற்பொறியாளர் ஆனந்தராவ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை மாநகராட்சி (சாலைப் பணியாளர் பாஸ்கர் உரிய அரசு அனுமதி பெற்றிருந்த ஒரு கட்டிட உரிமையாளரை, பூட்டி சீல் வைக்கப்போவதாக மிரட்டி ₹50,000 லஞ்சம் வாங்கியதற்காக ஜூலை 10 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ராயபுரம் மண்டலத்தில் மெக்கானிக்கல் துறை ஒப்பந்ததாரரிடம் பில்களை பாஸ் செய்ய லஞ்சம் கேட்டதற்காக, பில் கிளார்க் துர்கா மற்றும் (NULM) ஊழியரான அவரது கணவர் கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

வழக்கமாக லஞ்ச புகார்களில் சிக்கிய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர்களை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது ஊழல் செய்வது இனி தனது கவனத்திற்கு வந்தால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளார்.

சென்னை வீடியோக்கள்

ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழின் முதல் நாவல் தந்த வேதநாயகம் பிள்ளையின் 200-வது பிறந்தநாள்: அவரது சொந்த ஊரில் குவிந்த தமிழ் ஆர்வலர்கள்!
தமிழின் முதல் நாவல் தந்த வேதநாயகம் பிள்ளையின் 200-வது பிறந்தநாள்: அவரது சொந்த ஊரில் குவிந்த தமிழ் ஆர்வலர்கள்!
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?
பஜாஜ் ஃபைனான்ஸ் ஊழியர் கொலை - கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட உடல் !! பின்னணி என்ன ?
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் குண்டாஸ்... 68 தொட்ட கைது நடவடிக்கை...
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் குண்டாஸ்... 68 தொட்ட கைது நடவடிக்கை...
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
Embed widget