வங்கி மேனேஜர் கன்னத்தில் பளார் மு.க.அழகிரி மகள் ஆவேசம்! வெளியான வீடியோ காட்சி!
திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னையில் SBI வங்கி மேனேஜரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வரும் தளத்தில் மின்தூக்கி செயல்படாத காரணத்தினால் கட்டிட உரிமையாளரான கயல்விழியிடம் வங்கி தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
அதையடுத்து, கயல்விழி மின்தூக்கி பிரச்சனை குறித்து பேச வந்தபோது வங்கி மேனேஜருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, கயல்விழி பேசுவதை கன்னத்தில் கைவைத்துக்கொண்டு மேனஜர் கேட்டுக்கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த கயல்விழி, "நான் பேசும்போது கன்னத்தில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாயா" எனக் கூறி அவரின் கன்னத்தில் பளார் என அறை விட்டார்.
இதனால், கயல்விழி மீது வங்கி மேனேஜர் போலீஸில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்ட போலீஸ், கயல்விழி மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
வங்கி மேனேஜரை கயல்விழி அறையும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















