மேலும் அறிய

திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

கள்ளக் காதலனால் கொடூரம் - வாடகை வீட்டில் பெண் வெட்டிக்கொலை – தப்பிய நபருக்கு தனிப்படை வலை

" திருமணம் மீறிய உறவு "

திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீனா ( வயது 48 ) இவருக்கு ரமேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்று ஒரு மகள் உள்ள நிலையில் , குடும்பத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது பிரவீனாவிற்கு அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நாளடைவில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இதன் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக குருக்கத்தி பகுதியில் இருவரும் வாடகை வீடு எடுத்து கணவன் மனைவி போல வசித்து வந்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிரவீனாவின் மகள் , தனது தாய் வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறி சத்தமிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்த போது, பிரவீனா ரத்தக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழ்வேளூர் போலீசார் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்பிரமணிய தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், பிரவீனாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் இருந்து முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

அரிவாளால் சரமாரியாக வெட்டு

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சம்பவத்திற்கு முன்பு பிரவீனாவுக்கும், அவருடன் வசித்து வந்த குமாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த குமார் , வீட்டில் இருந்த அரிவாளால் பிரவீனாவின் கழுத்து மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கீழ்வேளூர் போலீசார், தலைமறைவாக உள்ள குமாரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொலைக்கான பின்னணி மற்றும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

காரைக்குடி ITI: புதிய படிப்புகள், மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு; சேர்க்கை வாய்ப்பு!
காரைக்குடி ITI: புதிய படிப்புகள், மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு; சேர்க்கை வாய்ப்பு!
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை ( 20.08.26 ) மின்தடை - உங்கள் பகுதி உள்ளதா ?
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை ( 20.08.26 ) மின்தடை - உங்கள் பகுதி உள்ளதா ?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
ரூ.2,229 கோடியில் மெகா ரயில்வே திட்டம்! கும்மிடிப்பூண்டி மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?
ரூ.2,229 கோடியில் மெகா ரயில்வே திட்டம்! மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget