மேலும் அறிய

உயர்நீதிமன்ற உத்தரவு: விருதுநகரில் சீமைக் கருவேல அகற்றும் பணிகளை நீதிபதி செல்வம் ஆய்வு!

ஆக்கிரமிப்பு தாவரங்களையும் முழுமையாக அகற்றி, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செழுமை கருவூலம் – சீமைக் கருவேலமில்லா விருதுநகர்"

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் இன்று (29.07.2026) விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி பெரிய கண்மாய், பிசிண்டி, விருதுநகர் கௌசிகா நதி, சாத்தூர் வைப்பாறு மற்றும் படந்தால் உள்ளிட்ட பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு ஆக்கிரமிப்பு தாவரங்கள் அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் கொள்கை (TNPIPER) ஆகியவற்றின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் "செழுமை கருவூலம் – சீமைக் கருவேலமில்லா விருதுநகர்" என்ற சிறப்பு முன்முயற்சியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
 
பசுமை வளத்தை மீட்டெடுக்கும் பணி

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, அரசு நிலங்கள், ஆறுகள், கண்மாய்கள், கால்வாய்கள், நீர்நிலைகள், அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் இதர பொதுநிலங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் முழுமையாக அகற்றி, அவற்றிற்குப் பதிலாக உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பூர்வீக மர இனங்களை நடவு செய்து பசுமை வளத்தை மீட்டெடுக்கும் பணிகள் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள்

இப்பணிகளை மாவட்டம் முழுவதும் விரைவாகவும், தரமான முறையிலும் மேற்கொள்வதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வனத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுடனும் பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, துறைவாரியாக செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. மேலும், சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் காணப்படும் பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் அகற்றும் பணிகள் திட்டமிடப்பட்டன. அதன் ஒருபகுதியாக, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், விவசாய நிலங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த நிலங்கள் மற்றும் வளாகங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றி, அதற்குப் பதிலாக பூர்வீக மர இனங்களை நடவு செய்யும் பெருந்திரள் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் (Mass Eradication of Prosopis juliflora) இயக்கம் கடந்த 15.07.2026 அன்று மாவட்டம் முழுவதும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் நடவடிக்கையாக சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
வேருடன் முழுமையாக அகற்றப்பட வேண்டும்.

இப்பணிகளின் முன்னேற்றத்தை நேரில் ஆய்வு செய்த சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் அவர்கள், சீமைக் கருவேல மரங்கள் மீண்டும் வளராத வகையில் வேருடன் முழுமையாக அகற்றப்பட வேண்டும். அகற்றப்பட்ட பகுதிகளில் உடனடியாக பூர்வீக மரக்கன்றுகள் நடவு செய்து அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும், நீர்நிலைகளின் இயற்கை நீரோட்டம் பாதிக்கப்படாத வகையில் அனைத்து ஆக்கிரமிப்பு தாவரங்களையும் முழுமையாக அகற்றி, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Embed widget