மேலும் அறிய

அண்ணாமலை RETURNS.. நயினாருக்கு டாட்டா ? பாஜக மாஸ்டார் ப்ளான்

திமுக – அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகள் தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள நிலையில், இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, பாஜகவை தமிழ்நாட்டில் வளர்த்தெடுக்க அண்ணாமலையே சரியான சாய்ஸாக இருப்பார் என்று பாஜக தேசியத் தலைமை முடிவெடுத்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என தமிழ்நாடு வந்தப்போதெல்லாம் மோடியும், அமித் ஷாவும் பேசினர். ஆனால், தமிழ்நாட்டில் மீண்டெழுந்து வந்த பாஜகவிற்கு மீண்டும் இந்த தேர்தல் பேரடியாக இறங்கியிருக்கிறது. கடந்த 2021 தேர்தலில் 4 பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்குள் சென்ற நிலையில், இந்த முறை அதன் எண்ணிக்கை 8ஆக கூடும் என்று நம்பியிருந்த பாஜகவினரின் எண்ணத்தில் டன், டன்னாக மண் விழுந்திருக்கிறது.

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே பாஜக தமிழ்நாட்டில் அடுத்தக் கட்டத்திற்கு வளரும் என்ற முடிவை எடுத்த தேசிய பாஜக தலைமை, எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்க முடியும் என்ற கண்டிஷனை போட்டார் எடப்பாடி. வேறு வழியின்றி அதனையும் ஏற்றுக்கொண்டு, அண்ணாமலையை அதிரடியாக மாற்றம் செய்தது பாஜக. அவருக்கு பதில் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த நயினார் நாகேந்திரனை பாஜக தமிழக தலைவராக்கியது. ஆனால், கட்சித் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அண்ணாமலை ஆதரவாளர்களை ஓரங்கட்டும் பணிகளில் மட்டுமே அவர் மும்முரம் காட்டியிருந்ததாகவும், தேர்தல் பணிகளில் சுனக்கம் காட்டியதாகவும் அப்போதே பேசப்பட்டது.

குறிப்பாக, அதிமுகவிடம் கறாராக பேசி தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெற முடியாமல் பழைய அதிமுக பாசத்திலேயே நயினார் நாகேந்திரன் கோட்டை விட்டார், இதனால் திமுகவின் முக்கிய தளகர்த்தர்களை எதிர்த்து போட்டியிடவேண்டிய சூழல் பாஜக வேட்பாளர்களுக்கு ஏற்பட்டது.  இது பாஜகவின் வாக்கு சதவீதத்தில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

2021 தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது அதிமுக. அப்போது அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், பாமக, உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து 23 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது பாஜக. அந்த தேர்தலில் 11.24 சதவித வாக்குகளை பாஜக பெற வைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் அண்ணாமலை. 5க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தது. தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் கூட இந்த வாக்கு சதவீதத்தை பார்த்து வாயடைத்து போயினர். இது அண்ணாமலையின் தலைமைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்பட்டது.

தொடக்கம் முதலே ஆளும் திமுக அரசுக்கு மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களை விட அண்ணாமலையே அதிக குடைச்சல்களை கொடுத்து வந்தார். அண்ணாமலையை சமாளிக்க திமுக தலைமையே திணறிய நிலை அப்போது ஏற்பட்டது. குறிப்பாக, செந்தில்பாலாஜி விவகாரத்தில் அண்ணாமலை ஆடிய ஆட்டத்தில், அபாயத்திற்கு சென்று திரும்பினார் செந்தில்பாலாஜி. இப்படி அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கைகளால் திமுக Vs அதிமுக என்ற தமிழக அரசியல் களம், திமுக Vs பாஜக என மாறிப்போனது.

ஆனால், அதிமுகவுடனான கூட்டணிக்காக அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து பாஜக எப்போது விடுவித்ததோ, அப்போதிலிருந்தே அண்ணாமலை பாஜகவிற்காக கட்டி வந்திருந்த கட்டமைப்பு செங்கல், செங்கல்லாக சரியத் தொடங்கியது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அந்த கட்டமைப்பை மண்ணோடு மண்ணாக மாறிப்போயிருக்கிறது.

இந்நிலையில், விஜய் ஆட்சியை பிடித்திருக்கும் நிலையில் தமிழக அரசியல் களம் அடியோடு மாறிப்போயிருக்கிறது. இப்படியான சூழலில் மீண்டும் பாஜக தமிழ்நாட்டில் அடித்த அடியெடுத்து வைக்க வேண்டுமென்றால், அதிரடிக்கு பெயர்போன அண்ணாமலையை மீண்டும் மாநிலத் தலைவராக்க வேண்டும் என்ற குரல்கள் மாநில பாஜகவில் எழத் தொடங்கியிருக்கின்றன.

இதனால் விரைவில் பாஜக மாநிலத் தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன் மாற்றப்பட்டு, அந்த இடத்திற்கு மீண்டும் அண்ணாமலை வருவார் என்கிறார்கள் அவரின் வரவை எதிர்பார்த்து பாஜகவினர் காத்துக்கொண்டிருக்கின்றனர் .

சென்னை வீடியோக்கள்

ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
மதுரை நவராத்திரி: அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் தரிசனம்!
"காவல்துறை அராஜகம் ஒழிக" கழிவறையில் சோதனை செய்து பெண்கள் கைது !! கொந்தளித்த ஆர்ப்பாட்டகாரர்கள்
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 
அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
Embed widget