PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பாமக தலைவர் அன்புமணி தொடர்ந்து காங்கிரஸை விமர்சித்து வருவதன் பின்னணி என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாட்டின் முக்கியமான கட்சிகளில் ஒன்று பாமக. இவர்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கும் இடையே நடந்து வந்த மோதல் முடிவுக்கு வந்து கட்சி முழுவதும் அன்புமணி கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
பெரும்பான்மை இல்லாத காரணத்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தவெக ஆட்சி நடந்து வருகிறது.
காங்கிரசை குறிவைக்கும் அன்புமணி:
கூட்டணி கட்சிகள் சிலர் குடைச்சல் அளித்து வரும் சூழலில், தவெக அரசு பாமக-வுடன் இணக்கம் காட்டி வருகிறது. கட்சி முழுவதும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிறகு அன்புமணி காங்கிரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். காவிரி விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் காங்கிரசை அன்புமணி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேகதாது அணை கட்டக்கூடாது என்று ராகுல்காந்தி பேசினால் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறத் தயார் என்று அன்புமணி பேசியுள்ளார்.
காரணம் என்ன?
அன்புமணியின் இந்த பேச்சிற்கு மற்றொரு முக்கிய காரணம் உள்ளது. மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த அன்புமணிக்கு இதுவரை எந்த கிரீன் சிக்னலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தங்களிடமும் 4 எம்எல்ஏ-க்கள் இருக்கும் சூழலில், காங்கிரஸ் விலகினால் அந்த வெற்றிடத்தை தாங்கள் நிரப்பலாம் என்றும், அதன்மூலம் அமைச்சரவையில் இடம்பிடிக்கலாம் என்று அன்புமணி வியூகம் வகுத்துள்ளார்.
ஆட்சி அமைந்த பிறகு சில சமயங்களில் விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்து முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், பாமக-வுடன் தவெக நெருங்கியதை கண்ட திருமாவளவன் அதன்பின்பு அமைதியானார். மேலும், தவெக ஆட்சியில் விசிக அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளும் திருமாவளவனுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கவனம் காட்டும் காங்கிரஸ்:
விசிக அமைதியாகியுள்ள சூழலில், கர்நாடகத்தில் ஆட்சியில் காங்கிரஸ் உள்ள சூழலில் காங்கிரசை அன்புமணி குறிவைத்து விமர்சித்து வருகிறார். அதேசமயம், காங்கிரசும் அமைச்சரவையில் இடம்கிடைத்துள்ள சூழலில் அதற்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், தற்போது முதலே அதற்கான கூட்டணி காய்களை ஒவ்வொரு கட்சிகளும் நகர்த்தி வருகின்றனர். தவெக-வும் வரும் மக்களவைத் தேர்தலை காங்கிரசுடன் இணைந்து சந்திக்க வேண்டும் என்றே ஆர்வம் காட்டி வருகிறது.
Before You Go
"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
ட்ரெண்டிங் செய்திகள்






















