மேலும் அறிய

15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி

திருவாரூரில் 15 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் போக்சோவில் கைது - ஆம்புலன்ஸ் டிரைவருக்கு வலைவீச்சு

" பேத்தியை காணவில்லை - தாத்தா புகார் "

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் தாய் - தந்தையை இழந்த நிலையில் தாத்தா - பாட்டி வளர்ப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 19 ம் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாத்தா தனது பேத்தியை காணவில்லை என எடையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை தேடி வந்துள்ளனர்.

இறுதியாக போலீசார் பத்து நாட்களுக்கு பிறகு சிறுமியை கண்டறிந்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதில் சிறுமிக்கு குரும்பல் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விமல்ராஜ் ( வயது 24 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திய விமல்ராஜ் , சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

4 பேர் சிறுமிக்கு பாலியல் தொல்லை

தொடர் பாலியல் வன்கொடுமையின் காரணமாக சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கு வார்டு பாயாக பணி புரிந்த திருத்துறைப்பூண்டியை சேர்ந்த முத்துக்குமரன் ( வயது 39 ) என்ற இளைஞருடனும் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தை பயன்படுத்தி சிறுமியிடம் அவரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். பின்னர், மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவாக பணிபுரிந்த விஜய் என்பவர் விவரங்களை அறிந்து உதவி செய்வதாக கூறி சிறுமியிடம் ஆதரவாக பேசியுள்ளார். பின்னர், இவரும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

3 பேர் கைது - ஒருவர் தலைமறைவு

இதனையடுத்து, இந்த விவரங்களை எல்லாம் அறிந்த திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாண்டி பகுதியை சேர்ந்த சங்கரய்யா ( வயது 24) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருப்பூருக்கு அழைத்து சென்று பல முறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

இது குறித்த விஷயங்களை அறிந்த எடையூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விமல்ராஜ் , முத்துக் குமரன், சங்கரய்யா ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் தலை மறைவான ஆம்புலன்ஸ் டிரைவர் விஜய்யை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், 15 வயது சிறுமிக்கு தொடர்ந்து 4 பேர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

தலைப்பு செய்திகள்

15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget