மேலும் அறிய

Yuvan Fans Emotional Interview : எங்களுக்கு எல்லாமே யுவன்தான்..

மகிழ்ச்சியில் திளைத்திருந்தாலும், சோகத்தில் மூழ்கியிருந்தாலும் கைபிடித்து உடன் நிற்கும் இசை யுவனுடையது. தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு யுவன் ஓர் பொக்கிஷம். `நீ சிரிக்கின்ற போதிலும், நீ அழுகின்ற போதிலும், வழித் துணை போலவே, நான் இசையுடன் தோன்றுவேன்.. I'll be there for you' என்று யுவன் பாடிய போது, அது வெறும் பாடலாகத் தெரியவில்லை. ஆன்மாவுக்குள் நுழைந்து யுவன் செய்த சத்தியமாகவே இன்றுவரை நிற்கிறது. யுவனின் இசையை போதை என்று அநேகம் பேர் வர்ணித்திருக்கிறார்கள். யுவனின் குரல் செய்யும் மேஜிக் இன்னமும் போதையைத் தர வல்லது.

தனிமையை யுவனுக்குத் தஞ்சம் கொடுத்து, அவரது குரலிலும், இசையிலும் நேரத்தைக் கடக்கத் தெரிந்தவர்கள் இந்த நூற்றாண்டின் அதிர்ஷ்டசாலிகள். யுவனுடன் தனிமையைச் செலவு செய்வது நடு இரவில் நடுக்கடலில் படகில் செல்வதற்கு ஒப்பானது. உங்களோடு யுவன் பாடிக் கொண்டே, துடுப்பைச் செலுத்திக் கொண்டிருப்பார். தனிமை நெருக்கமானது. யாரையும் தெரியாத நிலத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் யுவனை அவர்களோடு அழைத்துச் செல்லலாம். இந்த பூமியின் மேல் யாருமே தனித் தனியானவர்கள் இல்லை என்று நா.முத்துகுமாரின் வார்த்தைகளை யுவனின் இசை மீட்ட, அவரின் குரல் மேலெழும்பி, ‘பேரன்பின் ஆதி ஊற்று’ என வரவேற்கும். யுவனின் ஹம்மிங் அதை நட்சத்திரங்களின் காலம் என நமக்கு உணர்த்தும். கைபிடித்து மக்களோடு வாழ வழிசெய்யும் யுவனின் குரல். தனிமை வித்தியாசமானது. பலர் சூழ வாழ்ந்தும், தனிமையை ஒவ்வொரு நொடியும் உணர்பவர்களால் நிறைந்திருக்கிறது இந்த உலகம். ’வானம்’ பாடல் கேட்டிருக்கிறீர்களா? அந்தப் பாடலைக் கேட்டவர்கள், ஒவ்வொருவரும் தங்கள் சுயநலத்தைக் குறைந்தபட்சம் பத்து நிமிடமாவது கீழே இறக்கி வைக்க செய்யும் ஆற்றல் கொண்டது. ‘தனக்காக வாழ்வதா வாழ்க்கை?’ என யுவன் உச்சத்தில் பாடும்போது, இருப்பவை அனைத்தையும் துறந்து பொது வாழ்க்கைக்குள் நம்மைத் தள்ளிவிட எத்தனிப்பார் யுவன். அந்த இசையும், ஹம்மிங் குரலும் நம்மை நாமே மறக்கச் செய்யும். தனிமை சோகமானது.

யுவன் செய்த சத்தியத்தின் படி, தனிமையில் அழுபவனுக்கான வழித்துணை யுவனே. காதலின் பிரிவு, காதலின் தோல்வி, காதலியின் பிரிவு, காதலின் ஏக்கம் என தனிமையையும், காதலையும் இணைக்கும் தருணங்கள் அனைத்தும் யுவனுக்கானவை. காதலைச் சொல்லாதவனின் ‘உண்மை மறைத்தாலும் மறையாதடி’ ஆகட்டும், காதலி மீதான ஏக்கத்தில் ‘காலை விடிந்து போகும் நிலவைக் கையில் பிடிக்க ஏங்கினேன்’ ஆகட்டும் சோகமான தனிமையைக் காக்க உதவும் மிகச் சிறந்த நட்பின் குரல் யுவன். ’உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை.. அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை’ என யுவன் பாடக் கேட்கும் போதெல்லாம், காதலிப்பவர்களும் பிரிவைப் பொறாமை கொள்வர். தனிமை மகிழ்ச்சியானது. தனிமையின் மகிழ்வு கொண்டாடப்பட வேண்டியது. தனி மனிதர்களோ, பிரியமானவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களோ, தனிமையில் மகிழும் போதும் யுவனின் குரல் வழித்துணையாக நிற்கிறது. காதலில் விழுந்தவர்கள், ‘நீதானே’ கேட்டுக் கொண்டே, சாலையில் சென்றுவிடாமல் இருக்க வேண்டும். யுவனின் குரலில், காதலின் மகிழ்வைக் கொண்டாடும் ஆர்யாவைப் போல, லாரிகளைக் கையால் தடுத்தால் பௌதிக விதிகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ’நடு காற்றில்.. தனிமை வந்ததே.. அழகிய ஆசை.. உணர்வு தந்ததே!’ என்று யுவன் பாட, தங்கள் காதலரோடு தனிமையில் இருப்பவர்கள் மகிழ்ச்சியின் மழையில் நனையலாம்.

தனிமை அசாத்தியமானது. கூட்டாகச் சமூக வாழ்க்கை வாழ விதிக்கப்பட்டிருக்கும் தனி மனிதர்களின் தனிமை தத்துவங்களால் நிரம்பியது. ‘எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்... அத்தனை கண்ட பின்பும், பூமி இங்கு பூ பூக்கும்’ என யுவன் பாட, ஒரு நாளில் மாறிப் போய்விடாத வாழ்க்கையின் தத்துவத்தை, நெருங்கிய நண்பனின் குரலில் மனதால் கேட்டு, உற்சாகம் கொண்டிருக்கிறது இந்தத் தலைமுறை. ‘பாவங்களை சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம்.. நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல்.. மண்ணுக்குள் செல்லுகிறோம்!’ என்று யுவனின் குரலில் எழும்பும் பிரார்த்தனை, குற்றவுணர்வில் புழுங்கும் மனித மனத்தை உலுக்கும் வல்லமை கொண்டது. யுவனின் குரலும், இசையும் நிரம்பிய தனிமை மனதிற்கு நெருக்கமானது, யுவனின் இசைப் பயணம் வெற்றி, தோல்விகளால் நிரம்பியது.

தொடர் தோல்விகளால் யுவன் முன்பைப் போல இல்லை எனவும் விமர்சனங்கள் எழும் காலம் இது. இவை அனைத்தையும் புறந்தள்ளி, புற்கள் நிரம்பிய மலைவெளி ஒன்றில், வெள்ளை அங்கி அணிந்து, கையில் ஆட்டுக் குட்டியும் நிற்கிறார் மீட்பர் ஒருவர். புன்னகையோடு, ”வாழ்க்கை ஒன்னும் பாரமில்லை.. வா லேசா!” என்று பாடிக் கொண்டிருக்கிறார்.

பொழுதுபோக்கு வீடியோக்கள்

Atlee: கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Bollywood.. விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை.. அட்லீ  நெத்தியடி பதில்!
Atlee: கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Bollywood.. விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை.. அட்லீ நெத்தியடி பதில்!
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget