Gangai Amaran on Actor Vijay: "உன்னை எப்படி எல்லாம் வளர்த்தாங்க"விஜயை வெளுத்து வாங்கிய கங்கை அமரன்!
Gangai Amaran on Actor Vijay: நடிகர் விஜய்க்கும் அவரது அப்பாவும் , இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையில் அவ்வபோது பிரச்சனைகள் தொடருவது சில வருடங்களாக இருந்து வருகிறது. மேடைகளிலும் கூட விஜயை சந்திரசேகர் வெளிப்படையாகவே சாடினார். விஜய் தனது இயக்கத்தை கட்சியாக மாற்ற வேண்டும் என்பதுதான் எஸ்.ஏ.சந்திரசேகரின் விருப்பம் . ஆனால் விஜய்யின் கணக்கோ வேறாக உள்ளது. அவர் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட ஏனோ தயக்கம் காட்டி வருகிறார். இந்த சூழலில் சமீபத்தில் விஜய் தனது அம்மா அப்பா மீதே வழக்கு தொடர்ந்தார். இது திரைத்துறையினருக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகப்பெரிய ஃபேன் பேஸ் கொண்ட நடிகர் , ரசிகர்களுக்கு முன் உதாரணமாக இருப்பவர். இப்படி சொந்த அம்மா , அப்பா மீதே வழக்கு தொடரலாமா என பல விமர்சனங்களை நெட்டிசன்கள் தெறிக்கவிட்டனர். இந்த நிலையில் சந்திரசேகருக்கு நெருக்கமானவரும், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முக கலைஞராக அறியப்படும் கங்கை அமரன் . விஜய் செய்தது தவறு என நேரடியாகவே மேடையில் பேசியிருக்கிறார். இது பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.