பிரியும் நட்சத்திர ஜோடி? தனஸ்ரீ - சஹல் DIVORCE? UNFOLLOW ! DELETE!
இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சஹல் மற்றும் தனஸ்ரீ தம்பதியினர் விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில், இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்துள்ளது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து செய்தி தற்போது தொடர்கதையாகி விட்டது. கோலிவுட் திரையுலகில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கிரிக்கெட் துறையில் காதல் திருமணம் செய்துகொண்ட ஹர்திக் பாண்டியா நடாசா தம்பதி சமீபத்தில் பிரிவை அறிவித்தனர். இதையடுத்து தற்போது அடுத்த காதல் ஜோடியும் விவாகரத்து செய்தி விரைவில் சொல்ல போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சஹல் தற்போது ஐபிஎல் லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 11 யுவேந்திர சஹல் தனஸ்ரீ என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டாற். நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் என பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா. கோவிட் லாக்டவுனில் சஹல் தனஸ்ரீ யிடம் டான்ஸ் கற்றுக்கொண்டதாகவும் அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த் ஜோடி இருவரும் துணையுடன் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த வருடம் தனஸ்ரீ தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தனஸ்ரீ சஹல் என இருந்த தன்னுடைய பெயரை தனஸ்ரீ வர்மா என மாற்றினார். அப்போதே இருவருக்கும் இடையே மனக்கசப்புகள் உள்ளதாகவும் பிரியப்போவதாகவும் வதந்திகள் பரவின.
இந்நிலையில் தற்போது யுவேந்திர சஹல் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மனைவி தனுஸ்ரீ உடன் எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்துள்ளார். மேலும் தனஸ்ரீ சஹல் இருவரும் ஒருவரை ஒருவர் இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்துள்ளனர். இருவரின் இந்த நடவடிக்கைகள் அவர்களின் விவாகரத்து தொடர்பான வதந்திகளை உண்மைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.