Kuraishi on Manimegalai Priyanka : "நீ சுயமரியாதை பேசலாமா? மணிமேகலை மேல தப்பு" பிரியங்காவுக்கு குரேஷி Support
நான் பிரியங்கா கிட்ட மன்னிப்பு கேட்கணுமா, எனக்கு சுயமரியாதைதான் முக்கியம் என்று சொல்லி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகினார் மணிமேகலை. இந்தநிலையில் மணிமேகலை மீது தான் தவறு என்றும், செட்டில் நடந்தது என்ன என்றும் குரேஷி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார் மணிமேகலை. அதற்கு காரணம் பிரியங்கா தான் என்றும் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார். குக்காக வந்திருக்கும் ஆங்கர் ஒருவர் என்னுடைய ஆங்கரிங் வேலைகளில் குறுக்கிடுகிறார், அவரது தவறை நான் நேருக்கு நேர் கேட்டதற்காக என்னை அவரிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்கள், எனக்கு பணத்தை விட சுய மரியாதை தான் முக்கியம் என்று சொல்லி வீடியோ வெளியிட்டிருந்தார். மணிமேகலைக்கு ஆதரவாக களமிறங்கிய நெட்டிசன்ஸ் பிரியங்காவை சரமாரியாக விமர்சித்தனர். ஆனால் இதற்கு பிரியங்கா தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இந்தநிலையில் அதே நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் குரேஷி, என்ன பிரச்னை நடந்தது என்பது தொடர்பாக விளக்கியுள்ளார். திவ்யா துரைசாமி எலிமினேட் ஆகும் போதுதான் இந்த பிரச்னை வெடித்துள்ளது. திவ்யா துரைசாமியை பற்றி நான் பேசலாமா என கேட்ட போது ரக்ஷன் ஓகே சொல்லியுள்ளார். பின்னர் அவர் திவ்யா துரைசாமியை பாராட்டி பேசிக் கொண்டிருக்கும் போது, குறுக்கிட்ட மணிமேகலை நீங்கள் பேச வேண்டாம் பிரியங்கா, ஏற்கனவே எல்லோரும் உங்களை தான் ஆங்கராக நினைக்கிறார்கள் என கடுப்பாகி தடுத்துள்ளார். ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே எல்லோர் முன்பும் இப்படி பேசிவிட்டதால் பிரியங்கா அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் அடுத்த நாள் இந்த விஷயத்தை பற்றி அதாவது உங்களை நான் பேசவிடல, இன்னைக்கு நீங்க ஜாலியா பேசலாம் என மணிமேகலையை பேச சொல்லிவிட்டு ஷூட்டிங்கை ஆரம்பிக்கலாம் என production teamல் பிரியங்கா சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு மணிமேகலை மறுப்பு சொல்லிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக குரேஷி சொல்லியுள்ளார்.
மணிமேகலையை மன்னிப்பு கேட்க சொல்லவேயில்லை என மறுத்துள்ளார் குரேஷி. அதேபோல் மணிமேகலைக்கு மட்டும்தான் சுயமரியாதை இருக்குமா என்றும், ஷூட்டிங்கில் எல்லோர் முன்பும் பிரியங்காவிடம் அப்படி நடந்து கொண்டதால் அவருக்கும் சுயமரியாதை இருக்கத்தானே செய்யும் என கேட்டுள்ளார். மேலும் அவர்களது தனிப்பட்ட பிரச்னைகளுக்காக சோசியல் மீடியாவில் பிரியங்காவை உருவக்கேலி செய்வது, குடும்ப வாழ்க்கையை பற்றி பேசுவது தவறு என ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக பதிவு போட்ட போது குரேஷி அதற்கு வாழ்த்து தெரிவித்து விட்டு பின்னர் டெலிட் செய்தார். இதுகுறித்து வீடியோவில் விளக்கம் கொடுத்துள்ளார். பாஸிட்டாவாக இருக்க வேண்டும் என்றுதான் கமெண்ட் செய்ததாகவும், அதற்கு மணிமேகலையிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை, ஆனால் நிறைய பேர் எனது கமெண்ட்டுக்கு கீழ் பிரியங்காவை விமர்சித்து கமெண்ட் செய்திருந்தார்கள் அதனால்தான் டெலிட் செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
பிரியங்காவுக்கு எதிராக பலரும் விமர்சித்து வரும் நேரத்தில், குரேஷி வெளியிட்ட வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது.