Dhanush Aishwarya Divorce : ’’பசங்க என்கூட தான்’’ தனுஷ் ஐஸ்வர்யா மோதல்? முடிவுக்கு வந்த பஞ்சாயத்து
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில் அவர்களது பிள்ளைகள் யாருடன் வாழ்வர்கள் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இந்த தம்பதிக்கு யாத்ரா , லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பின் இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்து 2022 ஆம் ஆண்டு விவாகரத்து பெற இருப்பதாக அறிவித்தார்கள். விவாகரத்தை அறிவித்தபின் இருவரும் தனித்தனியாக வசிக்க தொடங்கினர்.
அதே நேரம் மகன்களின் பள்ளி விழாக்களில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர் இதனால். இவர்கள் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் நம்பினர்.
இந்த நிலையில் இவர்களது விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் நேற்று நவம்பர் 29 ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கியது. சட்டப்பூர்வமாக இருவரும் விவாகரத்து பெற்றுள்ள நிலையில் யாத்ரா மற்றும் லிங்கா யாருடன் இருக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி தனுஷ் ஐஸ்வர்யா தங்கள் இரு மகன்களை கோ பேரண்டிங் முறையில் வளர்க்க முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொஞ்ச நாட்கள் தந்தையும் கொஞ்ச நாட்கள் தாயிடமும் குழந்தைகள் சுழற்சி முறையில் இருப்பார்கள் என்றும் இருவரது கல்வி மற்றும் இதர பொருளாதார ரீதியான பொறுப்புகளை இருதரப்பினரும் சமமாக பகிர்ந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
தங்களது விவாகரத்து முடிவு தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக இந்த முடிவை தனுஷ் ஐஸ்வர்யா எடுத்துள்ளதாக தெரிகிறது.