மேலும் அறிய

Aarti Ravi on Divorce : விவாகரத்து!’’எனக்கே தெரியாது’’ஆர்த்தி ரவி குற்றச்சாட்டு

சில நாட்களுக்கு முன் நடிகர் ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்வை முறித்து கொள்வதாக அறிவித்திருந்த நிலையில், அவரது அந்த முடிவில் தனக்கு உடன்பாடில்லை என அவரது மனைவி ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டின் லவ் பேர்ட்ஸ் என சொல்லும் அளவுக்கு சந்தோசமாக வாழ்ந்து வந்த ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதியின் திருமண வாழ்வில் சில மனக்கசப்புகள் இருந்து வருவதாக சில நாட்களுக்கு முன் கிசுகிசுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை பிரிவதாக சமுக வலைதளம் மூலம் அறிவித்தார். பொதுவாக பிரபல தம்பதியினர் பிரிவை அறிவிக்கும் போது இருவர் தரப்பிலும் ஒரே நேரத்தில் அறிவிப்பை வெளியிடுவது வழக்கம். ஆனால் இவர்களை பொறுத்தவரை ஜெயம் ரவி தரப்பில் இருந்து மட்டுமே அறிவிப்பு வெளியான நிலையில், ஆர்த்தி மௌனம் காத்து வந்தார். மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பயோவிலும் தற்போது வரது மேரிடு டூ ஜெயம் ரவி என்பதை ரிமூவ் செய்யாமல் இருந்தார். இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இன்று ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி, தனக்கும் ஜெயம் ரவியின் இந்த அறிவிப்பில் உடன்பாடில்லை என தெரிவித்து பரபர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது,

’’சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன்.

என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல....
ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமன்றி நல்வழி காட்டி வரும் பத்திரிக்கை ஊடக மற்றும்
ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என்
குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள்
மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி
கேட்டுக்கொள்கிறேன்.’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்

பொழுதுபோக்கு வீடியோக்கள்

Muthukumaran Vs Soundariya:
Muthukumaran Vs Soundariya: "தகுதியே இல்லாதவ" சீண்டிய முத்துக்குமரன்! சௌந்தர்யா Thuglife
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Chennai Car Parking Rules: ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Chennai Car Parking Rules: ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
Batlagundu Tollgate : அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Batlagundu Tollgate : அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Minister ponmudi: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய நபர் கைது - யார் அவர்?
Minister ponmudi: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய நபர் கைது - யார் அவர்?
வெற்றிகரமான தமிழக மாடலை சிதைப்பதா? மத்திய கல்வி அமைச்சரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பிய அன்பில்!
வெற்றிகரமான தமிழக மாடலை சிதைப்பதா? மத்திய கல்வி அமைச்சரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பிய அன்பில்!
வார இறுதியில் ஊருக்குப் போறீங்களா? சென்னையில் இருந்து இவ்வளவு பேருந்துகளா? எப்படி புக் செய்வது?
வார இறுதியில் ஊருக்குப் போறீங்களா? சென்னையில் இருந்து இவ்வளவு பேருந்துகளா? எப்படி புக் செய்வது?
Embed widget