மேலும் அறிய

Wolfdog: யாரு மேன் நீ? கிராஸ் ப்ரீட்..! ரூ.50,000,000 விலை, உலகின் முதல் ஓநாய் நாய், இவ்ளோ பிரமாண்டமா?

Wolfdog: பெங்களூரைச் சேர்ந்த விலங்கு ஆர்வலர் ஒருவர், உலகின் முதல் ஓநாய் நாயை ரூ.50 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார்.

Wolfdog: உலகின் முதல் ஓநாய் நாயானது, பாதி ஓநாயாகவும், மீதி நாயாகவும் உருவத்தை கொண்டுள்ளது.

உலகின் முதல் ஓநாய் நாய்:

பெங்களூரைச் சேர்ந்த விலங்கு ஆர்வலர் ஒருவர், கேடபாம்ப் ஒகாமி என்ற அரிய வகை ஓநாய் நாயை ( பாதி ஓநாய் மற்றும் பாதி நாய்) வாங்க 5.7 மில்லியன் டாலர்களை (தோராயமாக ரூ. 50 கோடி) செலவிட்டுள்ளார். உலகின் மிக அரிதான நாய் என்று கூறப்படும் ஒகாமி, உண்மையான ஓநாய்க்கும் காகசியன் ஷெப்பர்டுக்கும் இடையிலான முதல் கலப்பினமாகக் கருதப்படுகிறது. இது காண்போரை ஆச்சரியத்துடன் சேர்ந்து பிரமிக்க வைக்கவும் செய்கிறது.

காட்சிப்படுத்தப்பட்ட அரிய வகை நாய்:

பெங்களூருவைச் சேர்ந்த 51 வயதான எஸ். சதீஷ் பிரபலமான விலங்கு ஆர்வலராவார். இவர் 150க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாய் இனங்களை சேர்ந்த விலங்குகளை வைத்திருக்கிறார்.  தனது தனித்துவமான நாய் சேகரிப்பை ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்குக் காண்பிப்பதன் மூலம், தற்போது 30 நிமிடங்களுக்கு £2,200 (ரூ. 2 லட்சம்) முதல் ஐந்து மணி நேரத்திற்கு £9,000 (ரூ.8.50 லட்சம்) வரை சம்பாதிக்கிறார். இந்நிலையில் தனியார் நாய் கண்காட்சியில் அவர் வசமுள்ள கேடபாம்ப் ஒகாமி நாயை காட்சிப்படுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சதிஷ், "இந்த நாய்கள் அரிதானவை என்பதால் நான் அவற்றை வாங்குவதற்காக பணம் செலவிட்டேன். மேலும், மக்கள் எப்போதும் அவற்றைப் பார்க்க ஆர்வமாக இருப்பதால் எனக்கு போதுமான பணம் கிடைக்கிறது," என்று  தெரிவித்தார்.

ரூ.50 கோடி விலை

இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரான சதீஷ், "இது மிகவும் அரிதான நாய் இனம், ஓநாய் போலவே தோற்றமளிக்கிறது. இந்த இனம் இதற்கு முன்பு உலகில் விற்கப்படவில்லை" என்றார். "இந்த நாய் அமெரிக்காவில் வளர்க்கப்பட்டது, இது அசாதாரணமானது. நாய்கள் மீது எனக்குப் பிரியம், தனித்துவமான நாய்களை சொந்தமாக வைத்து இந்தியாவிற்கு அறிமுகப்படுத்த விரும்புவதால், இந்த நாய்க்குட்டியை வாங்க 50 கோடி ரூபாய் செலவிட்டேன்" என்றார்.

முன்னதாக இவர் கடந்த ஆண்டு சுமார் 27 கோடி ரூபாய் செலவிட்டு மிகவும் அரிதான சௌ சௌ எனும் நாயை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. தனது செல்லப்பிராணிகளுக்கு என 7 ஏக்கர் பரப்பளவில் ஒரு பண்ணையையே அவர் உருவாக்கியுள்ளார். ஆறு பராமரிப்பாளர்களும் அங்கு பணியாற்றி வருகின்றனர்.

பிரம்மிக்க செய்யும் ”கேடபாம்ப் ஒகாமி ”

உலகின் மிக அரிதான நாய் என்று கூறப்படும் இந்த நாய்க்குட்டி அமெரிக்காவில் பிறந்து பிப்ரவரியில் இந்தியாவில் ஒரு தரகர் மூலம் விற்கப்பட்டது. வெறும் எட்டு மாத வயதிலேயே, ஒகாமி 5 கிலோ எடையும் 30 அங்குல உயரமும் கொண்டுள்ளது. வலுவான புரோட்டின் டயட்டை மேற்கொள்ளும் ஒகாமி, நாளொன்றிற்கு 3 கிலோ பச்சை இறைச்சி உண்பதாக கூறப்படுகிறது. நாய் மற்றும் ஓநாயின் பாதுகாப்பு திறன் கொண்டு சிறந்த பாதுகாவலனாக இந்த ஓநாய் நாய் விளங்குவதாக கூறப்படுகிறது.

வலுவான தசை அமைப்பு மற்றும் பஞ்சுபோன்ற மேற்புறத்திற்கு பெயர் பெற்ற காகசியன் ஷெப்பர்ட் நாய்கள், ஜார்ஜியா, ஆர்மீனியா, அஜர்பைஜான் மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகள் போன்ற குளிர் நாடுகளிலிருந்து வருகின்றன. இந்த நாய்கள் விதிவிலக்கான காவல் நாய்களாகக் கொண்டாடப்படுகின்றன. பெரும்பாலும் மலைப்பகுதிகளில் ஓநாய்களிடமிருந்து கால்நடைகளைப் பாதுகாக்கப் பயன்படுகின்றன. கர்நாடகாவில் ஒகாமி ஏற்கனவே முத்திரையைப் பதித்துள்ளது.  திரைப்படத்தின் பிரீமியர் காட்சிகள் உட்பட பல உயர்மட்ட நிகழ்வுகளில் இந்த நாய் பங்கேற்றுள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Embed widget