மேலும் அறிய

டைடானிக் ஹீரோவுக்கு பிடித்த இடம்.. தமிழ்நாட்டின் சொர்க்க பூமி இது தான்.. எந்த இடம் தெரியுமா?

உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் பட கதாநாயகன் லியானார்டோ டிகாப்ரியோ ஆசியாவில்லையே எனக்குப் பிடித்த சுற்றுலா தளங்களில் இந்த இடம் முதன்மையானது என்று குறிப்பிட்டுள்ளார்

தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள ராமக்கல் மெட்டு. ஆசியாவிலேயே அதிகமாக காற்று வீசும் இடம் எந்த நேரமும் 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிக்கொண்டே இருக்கும். கம்பம் மெட்டு வழியாகவும் இந்த இடத்திற்கு செல்லலாம் அல்லது குமுளிக்கு சென்று குமுளியில் இருந்து மூணாறு செல்லும் சாலை வழியாக நெடுங்கண்டம் வழியாகவும் இந்த இடத்திற்கு செல்லலாம்.

டைடானிக் ஹீரோவுக்கு பிடித்த இடம்.. தமிழ்நாட்டின் சொர்க்க பூமி இது தான்.. எந்த இடம் தெரியுமா?

கேரள எல்லை

ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் குளிர் காற்று வீசும், பூமியின் சொர்க்கம் என அழைக்கப்படும் ஒரு மலைப்பிரதேசம் தமிழக - கேரளா எல்லையில் அமைந்துள்ளது. இந்த இடத்தை டைட்டானிக் படத்தின் ஹீரோ (லியோனார்டோ டிகாப்ரியோ) புகழ்ந்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்றது கேரளா என்பது நாம் அறிந்ததே. அதில் தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளா எல்லைகளில் இருக்கும் சுற்றுலா தலங்கள் புகழ்பெற்ற இடங்களாக உள்ளன. அப்படி ஒரு பசுமை போர்த்திய அழகிய மலை முகட்டில் இருக்கும் இடத்தைப் பற்றி பார்ப்போம். 

டைடானிக் ஹீரோவுக்கு பிடித்த இடம்.. தமிழ்நாட்டின் சொர்க்க பூமி இது தான்.. எந்த இடம் தெரியுமா?

ராமக்கல்மேடு

மலையுடன் பசுமை போர்த்திய அழகான ராமக்கல்மேடு மலைவாசஸ்தலம், கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த இடம், கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும். மூணாறு - தேக்கடி சாலையில் நெடுங்கண்டத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ராமக்கல்மேடு உள்ளது. தமிழ்நாட்டின் தேனி, கம்பம், குமுளி வழியாக இந்த இடத்திற்கு எளிதாக செல்லலாம். அனைத்து பருவங்களிலும் இங்கு மணிக்கு 35 கிமீ வேகத்தில் காற்று வீசும். குளிர்ந்த காற்று, பசுமையான மலைகள் என ராமக்கல்மேடு வியக்க வைக்கும் ஒரு இடம்.

இதையும் படிங்க: 

சீசன் காலங்கள்

இந்த இடத்தில் இருந்து தமிழ்நாட்டின் கிராமங்கள் மற்றும் நகரங்களின் பரந்த காட்சியை காண முடியும். செப்டம்பர் முதல் மே மாதம் வரை இங்கு சீசன் காலம். செல்லும் வழியெங்கும் பச்சை பசேலென்ற காப்பி, தேயிலை தோட்டங்களை பயணத்தில் ரசிக்கலாம். தேனி கம்பம் மெட்டு வழியாக 10 கி.மீ பயணித்தால் ராமக்கல்மேடு சென்று விடலாம். பட்ஜெட் சுற்றுலாவுக்கு ஏற்ற இடம். ராமக்கல்மேடு மலையேற்றம் செய்ய சூப்பர் இடம் ஆகும். மலையேற்றத்தில் குளிர் காற்று, பசுமையான மலைகள், தேயிலை தோட்டங்களின் காட்சி நிச்சயம் பிரமிப்பை ஏற்படுத்தும்.

டைடானிக் ஹீரோவுக்கு பிடித்த இடம்.. தமிழ்நாட்டின் சொர்க்க பூமி இது தான்.. எந்த இடம் தெரியுமா?

பூமியில் சொர்க்கம் இருந்தால் அது இங்கே தான்

பிரபல டைட்டானிக் படத்தின் ஹாலிவுட் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ ராமக்கல்மேடு குறித்து 'பூமியில் சொர்க்கம் இருந்தால் அது இங்கே தான்' என்று குறிப்பிட்டுள்ளார். ராமக்கல்மேடு என்ற அழகிய இடத்துக்குச் செல்லாமல் கடவுளின் சொந்த நாடான கேரளாவுக்குச் செல்வது முழுமையடையாது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற இந்த மலைவாசஸ்தலத்தில் இருந்து தமிழக கிராமங்கள் மற்றும் நகரங்களின் பரந்த காட்சியை காண முடியும்.

இதையும் படிங்க: Crime: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பல லட்சம் ரூபாய் கொள்ளை ;தொடரும் திருட்டு சம்பவங்கள் - எங்கே தெரியுமா..?

டைடானிக் ஹீரோவுக்கு பிடித்த இடம்.. தமிழ்நாட்டின் சொர்க்க பூமி இது தான்.. எந்த இடம் தெரியுமா?

பார்க்க வேண்டிய இடங்கள்

காற்றாலை பண்ணை, இடுக்கி ஆர்ச் அணை, குறவன் குறத்தி சிலை,ராமக்கல் சிகரக் காட்சி, ஆமை பாறை, ஆமை பாறை ஜீப் சஃபாரி, இயற்கைக் காட்சிப் புள்ளி, திராட்சை பண்ணை, தேயிலை தோட்டங்கள், தமிழ்நாடு வியூ, நீலக்குறிஞ்சி மலைகள், கம்பம் பள்ளத்தாக்கு காட்சி, ஹார்ன்பில் டவர், தூவல் நீர்வீழ்ச்சிகள் இங்கு தவறாமல் பார்க்க வேண்டிய இடங்கள் ஆகும். தன் மனைவி சீதையைக் கடத்திச் சென்ற லங்கா அரசன் ராவணனைத் தேடுவதற்காக ராமர் தனது கால்களை ராமக்கல்மேடு முனையில் வைத்ததாக இந்த இடத்தின் பின்னணியில் உள்ள கதை கூறுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Embed widget