வீட்டில் உள்ள முதியவர்களை கவனித்து கொள்ள சில டிப்ஸ் இதோ..

Published by: ஜான்சி ராணி

குறிப்பிட்ட இடை வெளியில் முதியவர்கள் முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது.

பார்வையில் குறைபாடு இருந்து, பொருத்த மற்ற கண்ணாடி அணிந்திருந்தால் கீழே விழ வாய்ப்புண்டு.

மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் எடுத் துக்கொள்ளக் கூடாது.சில மருந்துகளின் பக்க விளைவால் கூட கீழே விழலாம்.

படுக்கையிலிருந்து வேகமாக எழுந்து உடனே நடக்கக்கூடாது. மெல்ல அமர்ந்து சற்று நேரம் கழித்து நின்று, பின் நடக்க வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லுங்கள்..

தயங்காமல் வாக்கிங் ஸ்டிக், அல்லது ஃப்ரேம் பயன் படுத்தவும்.

உடற்பயிற்சி தசைகள், மூட்டுக்கள் திறனை மேம்படுத்துவதால், தவறா மல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

படுக்கையறை, குளி யலறை, படிக்கட்டுகளில் போதுமான வெளிச்சம் இருக்கிறதா என உறுதி செய்ய வேண்டும்.

குளியலறை, கழிப் பறை, படிக்கட்டுகளில் இரும்புக் கைப்பிடிகள் பொருத்த வேண்டும்.

மருத்துவமனை, நடைப்பயிற்சி உள்ளிட்ட வேலைகளில் கூடுமான வரை வீட்டுப் பெரிய வர்களுடன் யாரேனும் துணைக்கு செல்வது நல்லது.