ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றங்கள்! லோயர் பெர்த் யாருக்கு கிடைக்கும்?
ரயில்வே சேவையில் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்யும் காலம் (Advance Reservation Period) 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
அதேபோல் இந்தியாவில் ரயில்கள் மிகவும் சிக்கனமான மற்றும் நம்பகமான பயண முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. கோடிக்கணக்கான மக்கள் தினந்தோறும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்திய ரயில்வே (Indian Railways) பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் டிக்கெட் (Train Ticket) முன்பதிவு நடைமுறையில் பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. புதிய செயலிகள், குறைந்த முன்பதிவு காலம் மற்றும் லோயர் பெர்த் ஒதுக்கீடு தொடர்பான புதிய விதிகள் இவற்றில் முக்கியமானவை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமானது ‘ரயில் ஒன்’ (Rail One) செயலி. அதன்படி பயணிகள் இப்போது முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை ஒரே செயலியில் பதிவு செய்ய முடியும். புதிய ‘ரயில் ஒன்’ (Rail One) செயலி மூலம் உணவு ஆர்டர், டிக்கெட் ரத்து, பிளாட்ஃபார்ம் தகவல், நேரடி ரயில் நிலை போன்ற அனைத்து தகவல்களும் எளிதில் கிடைக்கின்றன. முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்யும் காலம் (Advance Reservation Period) 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறுகிய காலப்பகுதியில் பயணம் திட்டமிடுபவர்களுக்கு எளிதாக முன்பதிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது பலர் லோயர் பெர்த் (Lower Berth) கிடைப்பதில் சிரமப்படுகிறார்கள். ஆனால், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு, கிடைக்கும் நிலையில் லோயர் பெர்த் தானாக ஒதுக்கப்படும்.

இந்திய ரயில்வே விதிகளின்படி, மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு லோயர் பெர்த் தானாக ஒதுக்கப்படுகிறது, எப்பொழுது அது கிடைப்பதெனும் நிலையைப் பொறுத்தே. மேலும், பயணத்தின் போது காலியாக உள்ள லோயர் பெர்த்கள் இருந்தால், டிக்கெட் சரிபார்ப்பாளர் (TTE - Travelling Ticket Examiner) அவற்றை மூத்த பயணிகளுக்கு மாற்றம் செய்ய அதிகாரம் பெற்றுள்ளார்.ரயில்வே அதிகாரிகளின் அறிவிப்பின்படி, இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பயணிகள் தங்களுடைய தனிப்பட்ட பெர்தில் தூங்க அனுமதிக்கப்படுவர்.
ஆனால் இந்த நேரத்திற்குப் பிறகு இருக்கையை மற்ற பயணிகள் பகிர்ந்து கொள்ள முடியும். RAC (Reservation Against Cancellation) கொண்ட பயணிகளில், சைடு லோயர் பெர்த் (Side Lower Berth) பயணியும் சைடு அப்பர் பெர்த் (Side Upper Berth) பயணியும் பகல் நேரத்தில் ஒன்றாக அதை உபயோகிக்கும் நடைமுறை தொடர்கிறது. ஆனால் தூக்க நேரத்தில் சைடு லோயர் பெர்த்தில் இருப்பவருக்கு முழு உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள், மூத்த குடிமக்களுக்கும் சாதாரண பயணிகளுக்கும், டிக்கெட் முன்பதிவும் பயணமும் சுலபமாக இருக்கச் செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.





















