Apple device hacked : எச்சரிக்கை! ஆப்பிள் சாதனங்களுக்கு விபூதி அடித்த ஹேக்கர்ஸ்! ஷாக்கான நிறுவனம்!! தப்பிக்க இதை செய்யுங்கள்!
அவை ரிமோட் அட்டாக்கர் மூலம் தன்னிச்சையான குறியீட்டை (Execution of arbitrary code_இயக்கவும், bypass security ஐ கட்டுப்படுத்தி அதனை நிராகரிக்கவும் முடியும் .
நீங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான மேக் , வாட்ச் அல்லது டிவியை பயன்படுத்துபவராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானதுதான். தற்போது பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் இந்த மூன்று தயாரிப்புகளிலும் இரண்டு தீவிரமான பாதிப்புகளைக் கண்டறிந்துள்ளனர், இதன் மூலம் ஹேக்கர்கள் உங்கள் சாதனங்களைக் கட்டுப்படுத்தவும், தீய நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்தவும் முடியும்.
ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் மற்றும் மேக் கணினி போன்றவைக்கு உலகமெங்கிலும் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். உடற்பயிற்சி மோகம் இந்தியர்களிடம் நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது, இதன் காரணமாக கோடிக்கணக்கான இந்தியர்கள் ஆப்பிள் கைக்கடிகாரங்களைப் பயன்படுத்துகின்றனர்.அதே போல மேக் கணினியையும் அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆப்பிள் டிவிக்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது. ஆப்பிள் விலை உயர்வான சாதனங்களை விற்பனை செய்வதால் அதன் மீது ஒரு சமுதாய ஸ்டேட்டஸ் உள்ளது . அதோடு மற்ற இயங்குதளங்களை காட்டிலும் ஆப்பிளின் ஐஓஎஸ்-இல் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் என்பதும்தான்.
ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளிகளிலும் , ஆப்பிள் , ஆண்ட்ராய்ட் போன்ற இயங்குதள பயன்பாட்டில் பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் உள்ளனவா என பாதுகாப்பு தர ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்துவது வழக்கம் . அந்த வகையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளியிடப்பட்ட இரண்டு அறிவுரைகளில், இந்தியாவின் மத்திய இணைய பாதுகாப்பு நிறுவனமான இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In), இந்த மூன்று தயாரிப்புகளிலும் உள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளது. குறிப்பாக மேக் இயங்குதளம் தீவிரமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் , அது முக்கியமானது என்றும் மேற்க்கோள் காட்டப்பட்டுள்ளது. அதாவது "Apple Mac OS இல் பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அவை ரிமோட் அட்டாக்கர் மூலம் தன்னிச்சையான குறியீட்டை (Execution of arbitrary code_இயக்கவும், bypass security ஐ கட்டுப்படுத்தி அதனை நிராகரிக்கவும் முடியும் . " என தெரிவித்துள்ளனர்.
தன்னிச்சையான குறியீட்டை செயல்படுத்துதல் (Execution of arbitrary code)என்பது, பாதிப்பைப் பயன்படுத்தி சாதனத்தின் கட்டுப்பாட்டைப் பெற்ற பிறகு, ஒரு ஹேக்கர் தனது விருப்பப்படி கட்டளை அல்லது இலக்குகளை மாற்ற முடியும். எளிமையான சொல்ல வேண்டுமானால் ஒரு ஹேக்கர் பாதிக்கப்படக்கூடிய சாதனத்தை எடுத்து, அவர்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் செய்வார். அது மிகப்பெரிய தீங்காக கூட இருக்கலாம்.தற்போது ஹேக்கர் வசம் மில்லியன் கணக்கான சாதனங்கள் கட்டுப்பாட்டில் இருக்கலாம் என கருதப்படுகிறது.
எந்த ஒரு பாதுகாப்பு குறைபாடுகளையும் கண்டறிந்த பிறகு ஆராய்ச்சியாளர்கள் அதனை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவிப்பது வழக்கம் அதன் அடிப்படையில் ஆப்பிள் நிறுவனம் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக மேக், வாட்ச் மற்றும் டிவி உள்ளிட்ட சாதனங்களுக்கு புதிய அப்டேட்டுகளை வழங்கியுள்ளது. பயனாளர்கள் உடனே அதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொபைல் , ஐபேட் உள்ளிட்ட பிற சாதனங்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.