நைஜீரிய மொழி நிலப்பரப்பில் இந்தியாவின் Koo App ஏற்படுத்தியுள்ள மாற்றம்!
சொந்த கருத்துகளை தாய் மொழியில் பகிரும் நோக்கத்துடன், பல்மொழி நுண்வலைப்பதிவு தளமான Koo App, ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார மையமான நைஜீரியாவில் தனது இருப்பை வலுப்படுத்தி வருகிறது.
500க்கும் மேற்பட்ட மொழிகள் கொண்ட நைஜீரியாவில் நுண்வலைப்பதிவு தளத்திற்கான போட்டியில் Koo App.
சொந்த கருத்துகளை தாய் மொழியில் பகிரும் நோக்கத்துடன், பல்மொழி நுண்வலைப்பதிவு தளமான Koo App, ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார மையமான நைஜீரியாவில் தனது இருப்பை வலுப்படுத்தி வருகிறது.
மேட்-இன்-இந்தியா செயலியாக, ஆங்கில மொழிபெயர்ப்புகள் உதவி இல்லாமல் மக்கள் தங்கள் தாய்மொழியில் கருத்துக்களை வெளிப்படுத்த உதவுகிறது. இந்தியாவில், Koo App இந்தியாவில் இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, பங்களா, அஸ்ஸாமி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம்; இன்னும் பல எதிர்காலத்தில் தொடங்கப்படும் மொழிகள் என அனைத்திலும் தடையற்ற தொடர்புகளை எளிதாக்கியுள்ளது.
இந்தியாவின் மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கு நிகராக நைஜீரியாவில் உள்ளது - 500 க்கும் மேற்பட்ட மொழிகள் இக்போ, ஹவுசா, யோருபா, ஃபுலா, டிவ் போன்றவையிலும் நைஜீரிய மக்கள் Koo App-ஐ பயன்படுத்த வாய்ப்பாக அமைகிறது.
நைஜீரியாவிற்கு கூடுதலாக ஆப்பிரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நைஜீரியா மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. கூடுதலாக நுண்வலைப்பதிவு தளங்கள் அதன் மாபெரும் சந்தைக்கு பலமாக இருக்கிறது. Koo App அதன் புதுமையான அம்சங்களை வெளிக்கொணர, இந்தியா மட்டுமல்லாமல் ஒரு சர்வதேச பயணத்திற்கு ஒரு இந்திய தயாரிப்பு சென்று கொண்டிருக்கிறது.
நைஜீரியாவில் அதிகாரப்பூர்வ மொழியான ஆங்கிலத்தில் தற்போது கிடைக்கிறது என்றாலும், Koo App இருக்கும் ஆப்பிரிக்க தேசத்தில் உள்ள பயனர்களை இணைக்கவும், கருத்துக்களை பகிரவும், சொந்த மொழியை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தாய்மொழியில் கருத்துக்களை பகிர ஊக்குவிக்கிறது.
Koo App தளம் ஒரு நிலையான வேகத்தில் வளர்ந்து வருகிறது நைஜீரியா, நாட்டின் கலாச்சார நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு அவர்களின் மொழியில் கருத்துக்களை வழங்க வசதி ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ளதைப் போலவே நைஜீரிய பயனர்களுக்கும் மொழி அனுபவத்தை சிறப்பாக உணருகின்றனர்.
Koo App ஒரு புதிய அணுகுமுறையுடன் மார்ச் 2020இல் தொடங்கப்பட்ட நுண்வலைப்பதிவு தளமாகும், மற்றும் பல்வேறு மொழியியல் பின்னணியில் உள்ளவர்களை ஒன்றிணைக்கும் மிகமுக்கிய இணையதளமாகவும் இருக்கிறது.
அக்டோபர் 2021இல், கூதளம் 15 மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. பயனர்கள் - உட்பட தலைசிறந்த ஆளுமைகள், விளையாட்டு, சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், என பல்வேறு தரப்பினர் இலக்கியம், சினிமா, விளையாட்டு, நகைச்சுவை, சமூக கருத்துக்கள், மக்கள் பிரச்சனைகள் முதலான தொடர்பாக பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்