மேலும் அறிய

Chandrayaan-3 Rover: நாடே எதிர்பார்ப்பு..! -200 டிகிரி கடும் குளிர், இன்று மீண்டு வருமா சந்திரயான் 3-இன் பிரக்யான் ரோவர்?

சந்திரயான் 3 திட்டத்தின் பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்று மேற்கொள்ள உள்ளது.

சந்திரயான் 3 திட்டத்தின் பிரக்யான் ரோவர் -200 டிகிரி வரையிலான கடும் குளிரில் இருந்த நிலையில், அது மீண்டும் செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த இந்தியர்களிடையேயும் நிலவுகிறது.

சந்திரயான் 3 திட்டம்:

விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளையுமே ஆச்சரியப்படுத்தும் வகையில், திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக தரையிறக்கியது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதையடுத்து லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றின் மூலம் நடைபெற்ற அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் நிலவில் பல்வேறு கனிமங்களுடன், ஆக்சிஜன் போன்ற வாயுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தூங்க வைக்கப்பட்ட ரோவர்:

அறிவியல் ஆராய்ச்சிகளை தொடர்ந்து நிலவின் சூரிய ஒளி மறையும் சூழல் தொடங்கியதால், கடந்த 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முறையே லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை அடுத்தடுத்து ஸ்லீப் மோடிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 20ம் தேதி முதல் நிலவின் மேற்பகுதியில் மீண்டும் சூரிய ஒளி பட தொடங்கியுள்ளது. இதனால், லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ஆனால், கடந்த 2 வாரங்களில் சூரிய ஒளியே படாத அந்த பகுதியில்  மைனஸ் 120 டிகிரி முதல் மைனஸ் 200 டிகிரி வரையிலான கடும் குளிர் நிலவியுள்ளது. அதனால், ஏற்பட்ட தாக்கத்தை கடந்து பிரக்யான் ரோவர் செயல்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் ரோவரில் உள்ள சாதனங்கள் இந்த கடும் குளிரால் உறைந்து செயலற்று போக அதிக வாய்ப்புள்ளதாகவே அறிவியல் சாத்தியக்கூறுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: Aditya L1: அப்படி போடு.. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து சூரியனை நோக்கி புறப்பட்டது ஆதித்யா எல்1.. அடுத்தது லெக்ராஞ்சியன் புள்ளி தான்..!

எப்படி எழுப்பப்படும்?

நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ளது. APXS மற்றும் LIBS பேலோடுகள் அணைக்கப்பட்டுள்ளன. ​பேட்டரி ஏற்கனவே முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி முதல் நிலவின் மேற்பரப்பில் சூரிய ஒளி விழ தொடங்கியுள்ள நிலையில், சாதனங்களில் உள்ள சூரிய ஒளி தகடுகள் கூடுதல் ஆற்றலை சேமிக்க தொடங்கியுள்ளன.  பூமியிலிருந்து வழங்கப்படும் சிக்னல்களை பெறும் ரிசீவரும் ஆன் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை பூமியிலிருந்து வழங்கப்படும் கட்டளைகளை ஏற்று, ரோவர் உயிர் பெற்று எழுந்தால் அது மீண்டும் நிலவின் மேற்பரப்பில் பயணித்து பல்வேறு கூடுதல் தகவல்களை வழங்கும்.

மீண்டும் வருமா பிரக்யான் ரோவர்?

ஒருவேளை இஸ்ரோ பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பட வைத்தால், அதில் உள்ள சாதனங்கள் மூலம் மேலும் பல்வேறு தகவல்களை சேகரிக்க முடியும். இது இந்தியாவிற்கான போனஸாகவே கருத முடியும். காரணம் ஏற்கனவே இந்த ரோவர் 14 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அது மீண்டும் செயல்பட தொடங்கினால், அடுத்த 14 நாட்களுக்கும் நிலவின் மேற்பரப்பு, வளிமண்டலம் மற்றும் அங்கு உள்ள கனிமங்கள் மற்றும் வாயுக்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை இஸ்ரோவால் சேகரிக்க முடியும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்Salem Drunkard News | தலைக்கேறிய  போதை வெறிவீட்டை சூறையாடிய வாலிபர்கள் சேலத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
காஞ்சிபுரத்தை உலுக்கிய கொடூரம்.. துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது நேர்ந்த விபத்து - நடந்தது என்ன?
காஞ்சிபுரத்தை உலுக்கிய கொடூரம்.. துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது நேர்ந்த விபத்து - நடந்தது என்ன?
Diwali Special Bus: சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் - ரெடி ஆகுங்க மக்களே..
Diwali Special Bus: சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் - ரெடி ஆகுங்க மக்களே..
Breaking News LIVE 2nd NOV:
Breaking News LIVE 2nd NOV: "இந்தியாவிலேயே தமிழ்நாடும், கேரளாவும்தான் முற்போக்கு மாநிலங்கள்” - துணை முதலமைச்சர் உதயநிதி
Seeman:
Seeman: "கூமுட்டை.. Very Wrong Bro" விஜய்யை தாறுமாறாக தாக்கிப் பேசிய சீமான்!
Embed widget