ஸ்பேம் லிங்கில் இருந்து பாதுகாக்க.. வாட்ஸ் அப்பில் வெளிவரும் புதிய அப்டேட்!
WhatsApp:வாட்ஸ் அப் செயலில் வெளிவர இருக்கும் புதிய அப்டேட் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
வாட்ஸ் அப் செயலில் ஃபார்வேர்ட் செய்யப்படும் லிங்கை கூகுளில் செக் செய்து உண்மை என்பதை உறுதி செய்யும் வசதி விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
மெட்டா நிறுவனம் தனது பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வபோது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் உள்ளது போலவே வாட்ஸ் அப் செயலியிலும் சில வசதியை அறிமுகப்படுத்தி வருகிறது மெட்டா. தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் அனுபவத்தை சிறப்பாக செய்ய வேண்டிய அப்டேட்களை வழங்கி வருகிறது. ஜூன்,2024 ம் ஆண்டு மெட்டா AI வெளியானது. இப்போது கூகுளில் தேடுவதற்கு பதிலாக வாட்ஸ் அப்பில் தெரிந்துகொள்ளலாம்.
WABetainfo-வில் வெளியாகியுள்ள தகவலின் படி, மெட்டா ஏ.ஐ. சாட் பாக்ஸில் உள்ள உரையாடல்களை மானிட்டர் செய்யும். அதில் உங்களுக்கு தேவையானதை கேட்டால் அது தேடி தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒருவரின் பிறந்தாள், ஏதேனும் முக்கியமான நாட்களை நினைவு கூர்தல் ஆகியவற்றிற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபார்வேர்டு மெசேஜ் உண்மையா?
வாட்ஸ் அப் ஃபார்வேர்டு மெசேஜ்களில் வரும் தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருக்க வாய்ப்பு குறைவு என்று சொல்லப்படுகிறது. வாட்ஸ் அப், ஆண்ட்ராய்ட் மெசேஜ் உள்ளிட்டவற்றில் லிங்க் அனுப்பி அதன் மூலம் ஸ்மார்ட்ஃபோன் உள்ள தகவல்களை பெற முடியும். அப்படி ஹேக் செய்யவதை தடுக்க, பாதுகாப்பாக இருக்க வாட்ஸ் அப் புதிய முறையை தயாரித்து வருகிறது. WABetainfo-வில் வெளிவந்துள்ள தகவலின்படி, இனி வாட்ஸ் அப்பில் ஸ்பேம் மாதிரியான லிங்க் ஏதேனும் வந்தால் அதை கூகுளில் தேடிப் பார்க்க முடியும். அந்த லிங்கில் உள்ள தகவல் உண்மையானதா அதிகாரப்பூர்வ தகவலா என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இது ஸ்பேம் லிங்கில் இருந்து பாதுகாக்க முடியும். தெரியாத ஸ்பேம் லிங்கை க்ளிக் செய்தால் அதன்மூலம் ஹேக் செய்யும் வாய்ப்பு அதிகம்.
ஃபில்டர் வசதி:
வாட்ஸ் அப் சாட்டில் ஃபேவரைட்ஸ் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் ஃபேவரைட் லிஸ்டில் சேர்க்கும் நபர்களின் சாட் மட்டும் தனியாக இருக்கும். இதனால் நீங்க தேடும் அவசியம் இருக்காது. இப்போது புதிதாக’ஃபில்டர்’ வசதி அறிமுகம் ஆக இருக்கிறது. இதில் ‘All' 'unread', 'favourites', 'Groups' என்ற நான்கு ஃபில்டர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வாட்ஸ் அப் ஃப்ரோபைல் பக்கத்தில் இருந்த ஃபேவரைட் ஐகான் இப்போது சர்ச் டேபில் இந்த நான்கு ஃபில்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது பீட்டா வர்ஷனில் Android 2.24.23.4 கிடைக்கிறது. விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வாட்ஸ் அப் சாட்டில் Quitck ரியாக்சன் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இமோஜிகளை Quick ரியாக்சனில் பயன்படுத்த முடியும். இந்த அப்டேட்கள் பீட்டா வர்சனில் மட்டும் வெளியாகி இருக்கிறது. இது எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற அறிவிப்பு வரவில்லை.