Whatsapp New | `வாய்ஸ் நோட், பொம்மை emoji, Chat பப்பில்கள்.. - வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தும் புதிய அம்சங்கள்!
பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தவுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். வாட்சாப் அறிமுகப்படுத்தவுள்ள புதிய 5 சிறப்பம்சங்களைக் குறித்து இங்கு காணலாம்.
பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தவுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். வாட்ஸ் அப் நிறுவனத்தின் பீட்டா திட்டத்தில் வெளியாகவுள்ள புதிய அம்சங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் பல்வேறு பயனாளர்கள். எனினும், அனைவருக்கும் இதனை வெளியிடுவதற்காகத் தொடர்ந்து இந்த அம்சங்கள் மீது பணியாற்றி வருகிறது வாட்சாப் நிறுவனம்.
வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தவுள்ள புதிய 5 சிறப்பம்சங்களைக் குறித்து இங்கு காணலாம்.
1. புதிய வாய்ஸ் நோட் சிறப்பம்சம்
வாட்ஸ் அப் செயலியில் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள `global voice message player’ என்ற சிறப்பம்சத்தின் மூலம் பயனாளர்கள் சேட் பாக்ஸை விட்டு வெளியேறிய பிறகும், நீங்கள் கேட்டுக் கொண்டிருந்த வாய்ஸ் நோட் தொடர்ந்து கேட்கும்படி செய்யப்படும். மேலும், உங்கள் வாய்ஸ் மெசேஜ்களைப் `பின்’ செய்து வைத்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படும்.
மேலும், பிற சேட்களை நீங்கள் பார்வையிடும் போதும், நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் வாய்ஸ் நோட்டை pause செய்துகொள்ளவும் முடியும். நீண்ட வாய்ஸ் மெசேஜ்கள் அனுப்பப்படும் போது, இந்தச் சிறப்பம்சம் அதிகம் பயன்படும்.
2. புதிதாக டிசைன் செய்யப்பட்ட chat bubbles
சமீபத்தில் ஆப்பிள் iOS செயலியாக வெளியிடப்பட்ட வாட்ஸ் அப் அப்டேட்டில் இந்தப் புதிய அம்சம் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த அப்டேட்டில் பயனாளர்கள் புதிதாக டிசைன் செய்யப்பட்ட chat bubbles-ஐ பார்க்க முடியும். பழைய chat bubble போல அல்லாமல், புதிதாக வட்ட வடிவில், பெரிதாக, வண்ண மயமான chat bubbles தற்போது வழங்கப்படுகின்றன. இந்தச் சிறப்பம்சம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. பிரைவசி செட்டிங்கில் மாற்றம்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்களில் வாட்சாப் பயன்படுத்துவோருக்குப் புதிய சிறப்பம்சமாக பிரைவசி செட்டிங்கில் சில மாற்றங்களை வழங்குகிறது இந்நிறுவனம். குறிப்பிட்ட சிலருக்கு உங்கள் last seen தெரியாமல் இருக்கச் செய்யும், “My contacts except” ஆப்ஷன் புதிதாக சேர்க்கபடவுள்ளது. இந்தச் சிறப்பம்சம் ஏற்கனவே சில ஐஃபோன் பயனாளர்களுக்குச் சோதனை முறையில் வழங்கப்பட்டு வருவதால், இது ஆப்பிள், ஆண்ட்ராய்ட் ஆகிய இரு பயனாளர்களுக்கு விரைவில் வெளியிடப்படும்.
4. மெசேஜ் ரியாக்ஷன் அம்சம்
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசெஞ்சர் ஆகிய செயலிகளைப் போல, தனித்தனி மெசேஜ்களுக்கு எமோஜி ரியாக்ஷன்களை அனுப்பும் வசதியைப் புதிதாகச் சேர்க்கவுள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். மெசேஜ்களைத் தொட்டு, சிறிது நேரம் அழுத்திப் பிடிக்கும் போது, என்ன எமோஜி அனுப்பலாம் என்று தேர்ந்தெடுக்கும் வகையில், சில எமோஜிகள் வழங்கப்படும்.
5. புதிய பேக்கப் அம்சம்
வாட்ஸ் அப் நிறுவனம் புதிதாக பேக்கப் அம்சம் குறித்து சோதனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் உங்கள் சாட்களின் பேக்கப் அளவு, எதனை பேக்கப் செய்யலாம், எதனை பேக்கப் செய்ய வேண்டாம் முதலானவற்றைத் தேர்ந்தெடுக்கும் வசதி அளிக்கப்படும். புதிதாக ‘Manage backup size’ என்ற ஆப்ஷன் வழங்கப்படும். எனினும், இந்தச் சிறப்பம்சம் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும். எனெனில் ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் தங்கள் வாட்சாப் டேட்டாவை கூகுள் டிரைவில் பேக்கப் செய்து வைத்துக் கொள்ளலாம்.