WhatsApp Updates:அட்மினே டெலிட் பண்ணலாம்.. ஃபேஸ்புக் மாதிரி ரியாக்ஷன்.. வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்ஸ்!
வாட்ஸ் அப்பில் அடுத்தடுத்து வரப்போகும் சில அப்டேட்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற ஆப் வாட்ஸ்-அப் . பிரபல மேட்டா (ஃபேஸ்புக் ) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக தற்போது உள்ளது. டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல அப்டேட்களுக்கு பிறகு மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது. அந்த வரிசையில், அடுத்து வரப்போகும் சில அப்டேட்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
வாய்ஸ் கால்...
மெசேஜ் அனுப்பும் செயலி என்றாலும் தற்போது வாய்ஸ் கால், வீடியொகால் என அப்டேட்டாக இருக்கிறது வாட்ஸ் அப். அந்த வகையில் வாய்ஸ்காலில் ஒரு அப்டேட்டை கொண்டு வரவுள்ளது வாட்ஸ் அப். தற்போது உள்ள வாய்ஸ் காலின் லுக் மாற்றப்படவுள்ளது. வீடியோ காலுக்கு வருவது போன்ற யூசர் இண்டர்ஃபேசை வாய்ஸ் காலுக்கு கொண்டு வரவுள்ளது வாட்ஸ் அப். அதேபோல் குரூப் காலில் பேசுபவர்களின் டிபியில் வேவ் போன்ற தோற்றம் அப்டேட்டும் வரவுள்ளது.
அட்மினே டெலிட் செய்யலாம்...
குரூப் அட்மினுக்கு அதிகாரத்தைக் கொடுக்கும் ஒரு அப்டேட்டை கொண்டு வர வாட்ஸ் அப் நடவடிக்கை எடுத்து வருகிறது. வாட்ஸ் அப் குரூப்பில் உள்ளவர்கள் பதிவிட்ட ஏதாவது ஒரு தகவலை குரூப் அட்மின் டெலிட் செய்யும் புது அப்டேட்தான் விரைவில் வரவுள்ளது. இந்த அப்டேட்டால் குரூப்பை கட்டுக்குள் வைக்கவும், தேவையில்லாத மெசேஜை டெலிட் செய்யவும் முடியும்.
மெசேஜ் ரியாக்ஷன்..
இன்ஸ்டா மற்றும் பேஸ்புக்கில் இருப்பது போல மெசேஜ் ரியாக்ஷன் விரைவில் வாட்ஸ் அப்பில் வரவுள்ளது. மெசேஜுக்கு ரியாக்ட் செய்யும் வகையில் இந்த் அப்டேட் வரவுள்ளது. மேசேஜை அழுத்திப்பிடித்தால் சில எமோஜிக்கள் ஸ்கிரீனில் தெரியும். நாம் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Apple : ஐபோன் 'பேஸ் ஐடி' பிரச்சனை: டிவைஸ் மாத்தமுடியாது.. ஆனா.. அதிர்ச்சி கொடுத்த Apple நிறுவனம்
அனிமேஷன் எமோஜிஸ்..
புதிய ஹார்ட் வகை அனிமேஷன் மாதிரியான எமோஜியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது வாட்ஸ் அப். தற்போது சிவப்பு நிற இதய எமோஜி மட்டுமே அனிமேஷன் மாதிரியான எமோஜியாக வரும். தற்போது வரவுள்ள அப்டேட்டால் இன்னும் பல எமோஜிக்கள் அனிமேட் வகையில் இருக்கும்.
போட்டோ, வீடியோ ப்ரிவியூ
டாக்குமெண்ட் வகை போட்டோ, வீடியோவை ஷேர் செய்தால் அதனை ஓபன் செய்யாமல் பார்க்க முடியாது. அதற்கான ப்ரிவியூ வராது. ஆனால் விரைவில் ப்ரிவியூ பார்க்கும் அப்டேட்டை வாட்ஸ் அப் கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் டாக்குமெண்ட் வகை வீடியோ, புகைப்படத்தை அனுப்பும் முன் ப்ரிவியூ பார்க்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்