மேலும் அறிய

Apple : ஐபோன் 'பேஸ் ஐடி' பிரச்சனை: டிவைஸ் மாத்தமுடியாது.. ஆனா.. அதிர்ச்சி கொடுத்த Apple நிறுவனம்

Apple ஐபோனின் XS, 11 சீரிஸ், 12 சீரிஸ், 13 சீரிஸ் மற்றும் அதற்கு மேற்பட்ட சீரிஸ் மொபைல்களுக்கு இந்த ரிப்பர் வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது, முன் பக்க கேமரா உடைந்திருந்தால் மாற்றித்தரப்பட மாட்டாது.

பேஸ் ஐடி பயன்படுத்துவதில் கடந்த நான்கு வருடங்களாக எதிர்கொண்டு வந்த பிரச்சனைக்கு ஒரு வழியாக தீர்வை கண்டுபிடித்து, அதனை மக்களுக்கு அளிக்கவும் தயாராகி வருகிறது Apple நிறுவனம். Apple நிறுவனம் மொபைல் துறையில் தனக்கென ஒரு சாம்ராஜ்யம் உருவாக்கி அதில் கொடி கட்டி பறக்கிறதென்றால் அது மிகையாகாது. அவர்கள் அதில் புதிய புதிய விஷயங்களை சேர்த்து பயன்படுத்துபவர்களின் வாழ்வை முன்னேற்ற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருவதே அதனை அனைவரும் விரும்பக் காரணம். ஒரு முறை Apple -ஐ பயன்படுத்திவிட்டால் ஆண்டராய்டு பயன்படுத்த பிடிக்காது என்ற கூற்று பொதுவாக உண்டு. அதற்கு காரணம் Apple தரும் குஷன் தான். ஜம்மென்று நம்மை பயன்படுத்த வைத்துவிடுவார்கள். அது தரும் ஃப்ளோ, கையடக்கம், AI பயன்பாடுகள், அப்ளிகேஷன் வேகம், இன்டர்ஃபேஸ், அனைத்தும்தான் காரணம். ஆனால் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் அவனுக்குள்ளும் ஒரு சிறு குறை இருக்கத்தானே செய்யும் அதற்கு Apple விதிவிலக்கல்ல. பல நாட்களாக பிரச்சனையாக இருந்த ஃபேஸ் ஐடி பிரச்சனைக்கு தற்போது தீர்வை கண்டறிந்துள்ளனர்.

Apple : ஐபோன் 'பேஸ் ஐடி' பிரச்சனை: டிவைஸ் மாத்தமுடியாது.. ஆனா.. அதிர்ச்சி கொடுத்த Apple நிறுவனம்

Apple நிறுவனம் தனது பயனர்களுக்கு தொடர்ந்து புதுபுது அம்சங்களைப் புகுத்தி புதிய ஐஓஎஸ் (iOS) இயங்குதள அப்டேட்டுகளை வழங்குகிறது. தற்போது செயல்பாட்டில் உள்ள ஐஓஎஸ் 15.3, வரவிருக்கும் ஐஓஎஸ் 15.4 பதிப்புகள் குறித்து அண்மையில் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் Apple 'பேஸ் ஐடி வித் ஏ மாஸ்க்' (Face ID with a mask) எனும் மாஸ்க்குடன் போனை திறக்கும் வசதியை Apple தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பல வருடங்களாகவே Apple-இல் இருக்கும் அந்த பேஸ் ஐடி ஒபனில் உள்ள சிறு பிரச்சனைக்கு தீர்வு கண்டறியப்படாமலே இருந்தது. அந்த பிரச்சனை உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ ஆப்பிள் சர்விஸ் மையத்தில் சென்று கேட்டால், மொபைலை மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை என்றுதான் கூறி வந்தார்கள். தற்போது 4 வருடங்களுக்கு பிறகு அதனை கண்டறிந்துள்ளது Apple நிறுவனம். அந்த பிரச்சனை உள்ள ஐபோன் பயனர்களுக்கு, அவர்களது டிவைசை ரிப்பேர் செய்து தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் டிவைஸ் மாற்றித்தரப்படும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், Apple நிறுவனம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Apple : ஐபோன் 'பேஸ் ஐடி' பிரச்சனை: டிவைஸ் மாத்தமுடியாது.. ஆனா.. அதிர்ச்சி கொடுத்த Apple நிறுவனம்

Apple ஐபோனின் XS, 11 சீரிஸ், 12 சீரிஸ், 13 சீரிஸ் மற்றும் அதற்கு மேற்பட்ட சீரிஸ் மொபைல்களுக்கு இந்த ரிப்பர் வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதில் முக்கியக் குறிப்பாக, முன் பக்க கேமரா உடைந்திருந்தால் மாற்றித்தரப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொபைலை டிவைசாக அப்படியே மாற்றப்போவதில்லை, குறிப்பிட்ட பகுதியை மட்டும் ரிப்பர் செய்து தர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்த புதிய கொள்கை செயல்படுத்தப்பட்ட பிறகு, அங்கீகரிக்கப்பட்ட சேவை பிரதிநிதிகளுக்கு ஆப்பிள் முழு பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்யும், மேலும், அவர்களுக்கு கேமராவை சரிசெய்ய பிரத்யேக கருவிகள் மற்றும் மாற்று பாகங்கள் கொடுக்கப்படும். இந்த முன்முயற்சி நிறுவனத்தின் கார்பன் தடயத்தைக் குறைத்து, 2030க்குள் கார்பன் நியூட்ரலாக இருக்க வேண்டும் என்ற Apple இன் இலக்குக்கு பங்களிக்கும். 2022க்குள் பயனர்கள் தங்கள் சாதனங்களைத் தாங்களே சரிசெய்துகொள்ள அனுமதிக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், இதுவரை இன்னும் அது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இல்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget