WhatsApp: வாய்ஸ் மெசேஜை பல்வேறு மொழிகளில் ட்ரான்ஸ்க்ரைப் செய்யும் வசதி விரைவில் அறிமுகம்!
WhatsApp: வாட்ஸ் அப் செயலில் விரைவில் வெளியாக இருக்கும் அப்டேட்கள் குறித்த விவரங்களை காணலாம்.
வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் வாய்ஸ் மெசேஜ்களை எழுத்து வடிவில் அதாவது ட்ரான்ஸ்க்ரிப்ட்களாக விருப்பட்ட மொழியொல் தேர்ந்தெடுக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
WABetaInfo படி, வாய்ஸ் மெசேஜ்களை transcribe செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் உருவாக்கி வருவதாக சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாலும் அதை எழுத்து வடிவில், வார்த்தைகளாக படிக்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதோடு, அவர்களுக்கு தெரிந்த மொழிகளையும் இதற்காக தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழியில் வாய்ஸ் மெசேஜ் transcripts-களாக கிடைத்துவிடும். அதை படித்து செய்தியை தெரிந்துகொள்ளலாம்.
மொழிகள் பிரிவில், பயனர்கள் ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீசியம் (பிரேசில்), ரஷ்யன் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகள் வழங்கப்பட உள்ளதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு கூடுதலாக பல்வேறு மொழிகள் சேர்க்கப்பட உள்ளதாவும் தெரிவித்துள்ளது. ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்த பிறகு, டிரான்ஸ்கிரிப்ஷன் செயல்பட ஒரு தொகுப்பு உங்கள் மொபைலில் சேமிக்கப்படும்.
எப்படி வேலை செய்யும்?
தற்போதைக்கு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் இந்த வசதியை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கூடுதலாக, இது மொழி சார்ந்த பேசும் விதத்தை பயன்படுத்தி டிரான்ஸ்கிரிப்ஷன்களின் துல்லியத்தன்மையை மேம்படுத்தும். இந்த டிரான்ஸ்கிரிப்ஷன்களை இயக்க, பயனர்கள் மொழி சார்ந்த தொகுப்பைப் பதிவிறக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் பேசும் விதம், வார்த்தைகளை உச்சரிப்பது உள்ளிட்டவற்றை வைத்து வாட்ஸ் அப் வரவுள்ள அப்டேட் அதை எழுத்துக்களாக வார்த்தைகளாக மாற்றும். உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்யும்போது அதை தரவிறக்கம் செய்ய வேண்டியது அவசியம்.
இப்போது வாட்ஸ் அப் செயலில் ஸ்டேட்ஸில் ஹார்ட் வடிவ லைக் ஆப்சன் விரைவில் வர உள்ளது. இது இன்ஸ்டாகிராமில் உள்ளது. நீங்கள் ரியாக்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் செய்யலாம். Quick ரியாக்ட் செய்து போஸ்ட் பிடித்துள்ளது என்பதை ஒரு லைக் மூலம் தெரிவிக்கலாம். இந்த அப்டேட்கள் விரைவில் கிடைக்கும். ஸ்டேடஸை லைக் செய்தால் அது குறித்து நோடிஃபிகேசன் அனுப்பும். அதை தவிர்க்க வேண்டும் என்றால் குயிக் ரியாக்சன்ஸ் என்பதை ஆஃப் செய்து வைத்துவிடலாம். இதன் மூலம் ஸ்டேடஸ் லைக் செய்தால் உங்களுக்கு நோட்டிஃபை ஆகாது.
வீடியோ மெசேஜ்களை ஃபார்வேர்ட் செய்யும் வசதி உருவாகி வருகிறது. இதன் மூலம் பொதுவாக அனுப்ப வேண்டிய மெசேஜ்களை ஒவ்வொரு முறையும் ரெக்கார்ட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த புதிய அப்டேட்கள் எப்போது கிடைக்கும் என்பது குறித்து மெட்டா நிறுவனம் தகவல் வெளியிடவில்லை. பயனர்களிடம் கருத்துக் கேட்பதற்காக பீட்டா வர்ஷனில் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.