WhatsApp: வாட்ஸ் அப் கால் வசதியில் வரும் புதிய அப்டேட் - என்னன்னு தெரியுமா?
WhatsApp: வாட்ஸ் அப் செயலில் விரைவில் வெளியாக இருக்கும் அப்டேட்கள் குறித்த விவரங்களை காணலாம்.
வாட்ஸ் அப் செயலியில் கான்டெக்ட் லிஸ்டில் இல்லாமலேயே தொடர்பு எண்ணை கொண்டு கால் செய்யும் ’in-app dialer’ முறை விரைவில் அறிமுகம் ஆக இருக்கிறது. இதோடு பல்வேறு புதிய சிறப்பம்சங்களை ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு விரைவில் வழங்க இருக்கிறது. என்னென்ன புதிய அப்டேட்கள் வர இருக்கின்றன என்பது இக்கட்டுரையில் காணலாம்.
WABetaInfo தளத்தில் வெளியிடுள்ள தகவலில் வாட்ஸ் பல்வேறு புதிய வசதிகளை அறிமுக செய்ய இருப்பதாக தெரிவித்திருந்து. அதில் வாட்ஸ் அப் ஆடியோ, வீடியோ கால் பயன்படுத்துவம் அதிகரிக்க தொடங்கியிருப்பதை குறிப்பிட்டுள்ள வாட்ஸ் அப் நிறுவனம், தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் எண்ணை Contant லிஸ்டில் சேவ் செய்யாமலேயே தொடர்பு எண்ணை பயன்படுத்தில் கால் செய்யும் வசதி ப்ரோக்ராம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருமுறை மட்டும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை சேவ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தொழில் ரீதியிலாக, ஏதேனும் தகவல் தேவைப்படும் சமயங்களில் அழைப்புகளை மேற்கொள்ள இந்த வசதி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், டையல் இன் கால் அம்சத்தை வாட்ஸ் அப் எப்படி பயன்பாட்டிற்கு கொண்டு வரப் போகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் இதுவரை தெரிவிக்கவில்லை.
இதன் மூலன் Wi-Fi கால் வசதி அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிட்டன் குரூப்
இன்னொரு வசதியில் வாட்ஸ் அப் குழுவில் யாரெல்லாம் உறுப்பினர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே அப்படியொரு குழு இருப்பது குறித்து அறிய முடியும். இன்வைட் லிங்க் இருப்பவர்கள் மட்டுமே குழுவின் விவரங்களை அறிய முடியும். அதாவது குழுவை நிர்வகிப்பவர்கள் யாரேல்லாம் வாட்ஸ் அப் குழுவின் விவரங்களை காண முடியும் என்பது பற்றி தெரிந்துகொள்ள முடியும்.
வீடியோ மெசேஜ் ஃபார்வேர்ட் செய்யும் வசதி
வாட்ஸ் அப்-ல் ஆடியோ மெசேஜ் போலவே வீடியோ மெசேஜ் அனுப்பு வசதி அறிமுகப்படுத்தியிருந்தது. இப்போது வீடியோ மெசேஜ்களை ஃபார்வேர்ட் செய்யும் வசதி உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுவாக அனுப்ப வேண்டிய மெசேஜ்களை ஒவ்வொரு முறையும் ரெக்கார்ட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
ஒருமுறை மட்டும் வீடியோ ரெக்கார்டு செய்தால் போதுமானது. யாருக்கெல்லாம் அனுப்ப வேண்டுமோ ஃபார்வேர்ட் செய்யலாம்.
லைக் ரியாக்சன்ஸ்
வாட்ஸ் அப் ஸ்டேடஸ் குயிக் ரியாக்ஷன்
ஃபேஸ்புக். இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என்ற மூன்றையும் வைத்துள்ள மெட்டா நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு எல்லா வசதிகளையும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அப்டேட்களை வழங்கி வருகிறது.
இப்போது வாட்ஸ் அப் செயலில் ஸ்டேட்ஸில் ஹார்ட் வடிவ லைக் ஆப்சன் விரைவில் வர உள்ளது. இது இன்ஸ்டாகிராமில் உள்ளது. நீங்கள் ரியாக்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் செய்யலாம். அதைவிட Quick ரியாக்ட் செய்து போஸ்ட் பிடித்துள்ளது என்பதை ஒரு லைக் மூலம் தெரிவிக்கலாம். இந்த வசதியும் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு முதலில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து ஸ்டேடஸை லைக் செய்தால் அது குறித்து நோடிஃபிகேசன் அனுப்பும். அதை தவிர்க்க வேண்டும் என்றால் குயிக் ரியாக்சன்ஸ் என்பதை ஆஃப் செய்து வைத்துவிடலாம். இதன் மூலம் ஸ்டேடஸ் லைக் செய்தால் உங்களுக்கு நோட்டிஃபை ஆகாது.