WhatsApp: வாட்ஸ் அப்பில் வந்துடுச்சு எமோஜி ரியாக்ஷன்.. இப்படி பண்ணுங்க.. இனி அசத்தல்தான்..
அப்டேட்டின்படி, லைக், லவ், சிரிப்பு, ஆச்சரியம், சோகம், நன்றி ஆகிய எமோஜிக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்-அப் . பிரபல மேட்டா (ஃபேஸ்புக் ) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது. டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது. அந்த வரிசையில், 2022ம் ஆண்டில் சில அப்டேட்களை அறிவித்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, வாட்ஸ் அப் க்ரூப் சாட் பயன்படுத்துபவர்களுக்கு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.
எமோஜி ரியாக்ஷன்
பேஸ்புக்கில் உள்ளது போல எமோஜி ரியாக்ஷனை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் அப். பேஸ்புக்கில் லைக் மட்டுமே செய்யும் வசதி இருந்தது. பின்னர் அது எமோஜி ரியாக்ஷன்களாக அப்டேட் செய்யப்பட்டது. லைக், சோகம், சிரிப்பு என 6 ரியாக்ஷன்கள் கொடுக்கப்பட்டன. அதேபோல் எமோஜி ரியாக்ஷனை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான சோதனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது பீட்டா வெர்ஷனில் இது அறிமுகம் ஆகியுள்ளது. நீங்கள் Android 2.22.8.3.பீட்டா வெர்ஷன் நபராக இருந்தால் இந்த அப்டேட் உங்களுக்கு வந்திருக்கும்.
அப்டேட்டின்படி, லைக், லவ், சிரிப்பு, ஆச்சரியம், சோகம், நன்றி ஆகிய எமோஜிக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது மேலும் வாட்ஸ் அப் சேட்டை சுவாரஸ்யமாக்கும் எனத் தெரிகிறது. இப்போது பீட்டா வெர்ஷனுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த அப்டேட் விரைவில் அனைவருக்கும் நடைமுறைக்குக் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Poll ஆப்ஷன்
புதிதாக குரூப் சாட்டில் Poll ஆப்ஷனை வெளியிட இருக்கிறது வாட்ஸ் அப். Poll ஆப்ஷன் ஏற்கனவே பேஸ்புக்கில் நடைமுறையில் உள்ளது என்பது நாம் அறிந்த விஷயம். வாட்ஸ்அப்பில் எப்படி என்றால், குரூப்பில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு, பலவித ஆப்ஷனோடு ஓட்டெடுப்பு நடத்தலாம். எந்த ஆப்ஷனுக்கு குழுவின் உறுப்பினர்கள் அதிகம் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை இறுதியில் அறிய முடியும். நிர்வாகம் சார்ந்த முடிவுகளுக்கு இதுபோன்ற Poll ஆப்ஷன் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இது தற்போதைக்கு iOS பீட்டா வெர்சனில் மட்டும் கிடைக்கிறது. டெஸ்டிங்கில் இருப்பதால் எப்போது முழுமையாக அறிமுகப்படுத்தப்படும் என இதுவரை தெரியவில்லை. வாட்ஸ்அப் குரூப்பில் அனுப்பப்படும் செய்திகள் எண்ட் டு எண்ட் என்கிரிப்ட் முறையில் பாதுகாக்கப்படும். இதன் ஆன்ட்ராய்ட் வெர்சனுக்கு வெறித்தனமாக காத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்