WhatsApp Avatars : யாருக்கெல்லாம் வாட்ஸப்பின் புதிய அப்டேட் வசதியா இருக்கும்? என்னன்னு தெரியுமா? செக் பண்ணுங்க!
WhatsApp Avatars : வாட்ஸ் அப்-இன் புதிய அப்டேட்.
WhatsApp Avatar:
தகவல் பரிமாற்றத்தில் தவிர்க்க முடியா தொழில்நுட்பமாக மாறியுள்ளது வாட்ஸ் அப். இதை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். தனிநபர் தரவுகள் பாதுகாப்பு தொடர்பாக வாட்ஸ்-அப் செயலி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பொதுமக்களிடையே வாட்ஸ்-அப் செயலியின் பயன்பாடு குறைந்தபாடு இல்லை. பல முக்கிய செய்திகள் வரை வாட்ஸ் அப் ஃபார்வேர்டாக வரும் கதைகள் நாம் அறிந்ததே. பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்-அப் நிறுவனம் அவ்வபோது பல புதிய தொழில்நுட்ப வசதிளை வழங்கி வருவதும், அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இப்போது வாட்ஸ் அப்-இல் அவதார் ஸ்டிக்கர் அப்டேட் (Meta’s Avatar feature) வெளியாகியுள்ளது.
வாட்ஸ்-அப் அவதார் ஃபீச்சர்:
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். ஓ.எஸ்.- களில் உள்ள பீட்டா வர்ஷனில் மெட்டா அவதார் ஸ்டிக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஒரு சிலருக்கு, அதாவது வாட்ஸப் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்தச் சேவை கிடைக்கும் என்றும் சில நாட்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் அனைவரும் அவதார் ஸ்டிக்கர்களை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
வாட்ஸ் அப் செட்டிங்ஸ் பகுதியில் ‘அக்கவுண்ட்ஸ்’ பிரிவுக்கு கீழே ‘அவதார்’ என்று புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து உங்கள் அவதாரை உருவாக்கி கொள்ளலாம். இனி ஃபேஸ்புக், ஸ்நாப்சாட் போலவே வாட்ஸ் அப்பிலும் அவதார் வசதியை பயன்படுத்தலாம்.
மேலும், வாட்ஸ் அப் -ல் புதிய இமோஜிக்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் புரோபைல் பிக்சராக அவதார்களை வைத்துக்கொள்ளலாம்.
அடுத்தடுத்து வழங்கப்பட்ட அப்டேட்கள்:
உதாரணமாக, 256 பேர் மட்டுமே ஒரு வாட்ஸ்-அப் குழுவில் சேர முடியும் என்றிருந்த எண்ணிக்கை வரம்பு, 512-ஆக எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்கு பின் குறுஞ்செய்திகள் தானாக அழிவது, ஒருமுறை மட்டுமே குறுஞ்செய்தியை பார்க்க அனுமதிப்பது, ஒரே நேரத்தில் 32 பேர் வரை வீடியோ காலில் பேசும் அம்சமும், அந்த அழைப்புக்கான லிங்கை சக பயனாளர்களுக்கு அனுப்பி, அதனை தொட்டு கான்பிரன்ஸ் வீடியோ காலில் இணையும் வசதி, லேப்டாப்பில் வாட்ஸ்-அப் கணக்கை இணைக்க லிங்க்ட் டிவைஸ் வசதி போன்றவற்றையும் மெட்டா நிறுவனம் வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது.
விரைவில் லேப்டாப்பிலேயே வாட்ஸ்-அப் கணக்கிலிருந்து வீடியோ கால் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. விண்டோஸ் செல்போன்களில் சிலவற்றில் மற்றும் குறிப்பிட்ட புதிய வசதி சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் வெளியான புதிய வசதி:
பயனர்கள் தங்களது வாட்ஸ்-அப் கணக்கில் இருந்து தங்களுக்கே குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்ளும் புதிய வசதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் சோதனை முறையில் சில பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது அனைத்து ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கும் படிப்படியாக புதிய வசதி கிடைக்கப்பெறுகிறது.
பிக்ட்சர் - இன் - பிக்சர் மோட்:
இந்நிலையில் தான், பிக்ட்சர் - இன் - பிக்ட்சர் எனும் புதிய வசதியை, ஐ-போன் பயனாளர்களுக்கு வாட்ஸ்-அப் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக, WABetainfo அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஐ-போன் பயனாளர்கள் வாட்ஸ்-அப் செயலியில் வீடியோ கால் பேசும்போது, அந்த செயலியை விட்டு வெளியேற முடியாது. வேறு செயலியை பயன்படுத்தவும் முடியாது. ஆனால், புதியதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள பிக்ட்சர் - இன் - பிக்ட்சர் மோட் வசதி, அந்த பிரச்னைக்கு தீர்வாக அமைய உள்ளது. இதன் மூலம், வாட்ஸ்-அப் செயலியில் வீடியோ கால் பேசிக்கொண்டே, மற்ற செயலிகளையும் ஐ-போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.
புதிய எமோஜிக்கள் அறிமுகம்:
சோதனை முயற்சியாக தற்போது IOS 16.1 அல்லது அதற்கு மேல் இயங்கும் ஐபோன்களில் மட்டுமே, புதிய பிக்ட்சர் - இன் - பிக்சர் வசதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய வசதி அனைத்து ஐ-போன் பயனாளர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சாட் செய்யும் அனுபவத்தை மேம்படுத்த புதியதாக 8 எமோஜிக்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதோடு, மேலும் 21 புதிய எமோஜிக்களையும், ஒருவருக்கு அனுப்பும் குறுஞ்செய்திகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் தானாகவே அழிந்துவிடும் வசதியை மேம்படுத்தவும், புதிய அப்டேட் விரைவில் வழங்கப்படும் என வாட்ஸ்-அப் நிறுவனம் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.