Whatsapp Feature: ”இனி செட்டிங்ஸ் கூட ஈசி தான்”.. வாட்ஸ்-அப் செயலியில் மேலும் ஒரு புதிய அப்டேட்
வாட்ஸ்-அப் செயலியில் செட்டிங்ஸ் ஆப்ஷனில் உள்ள வசதிகளை எளிமையாக அணுக, புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது.
வாட்ஸ்-அப் செயலியில் செட்டிங்ஸ் ஆப்ஷனில் உள்ள வசதிகளை எளிமையாக அணுக, புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது. இதற்காக செயலிக்குள்ளே புதியதாக சர்ச் பார் ஒன்று இணைக்கப்பட உள்ளது.
வாட்ஸ்-அப் செயலி:
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அதில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுவும் பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு இந்த அப்டேட்கள் அடுத்தடுத்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான்,வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட் ஒன்றை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
செட்டிங்ஸ் வசதியை மேம்படுத்த அப்டேட்:
புதியதாக வழங்கப்பட உள்ள அப்டேட்டின் மூலம், செட்டிங்ஸ் ஆப்ஷனில் உள்ள அம்சங்களை பயனாளர்கள் எளிதாக அணுக முடியும். அதாவது பிரைவசி, நோட்டிபிகேஷன் மற்றும் பயனாளர் கணக்கின் விவரங்கள் போன்றவற்றை எளிதாக அறியலாம். வாட்ஸ்-அப் செயலியை புதியதாக பயன்படுத்துவோர், இதில் உள்ள ஆப்ஷன்களை முறையாக கையாள தெரியாத நபர்கள் மற்றும் தாமதமின்றி ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்புவோருக்கு இந்த புதிய வசதி பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
எப்படி அணுகலாம்?
whatsapp>>settings>> search box என்ற வரிசையில் சென்று செட்டிங்ஸ் வசதியில் உள்ள அம்சங்களை தேடி பில்டர் செய்து எளிதில் பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது சோதனை முறையில் சிலருக்கு இந்த அம்சம் வழங்கப்படுகிறது. விரைவில் அனைத்து பயனாளருக்கும் இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஸ்டேடஸை பேஸ்புக்கில் பகிரலாம்:
அண்மையில் வந்த அப்டேட்டின் படி, பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப்பில் அப்லோடு செய்யும் ஸ்டேட்டஸை நேரடியாக தங்கள் பேஸ்புக் கணக்கிலும் அப்லோடு ஆகும் படி புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது. வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேறாமல் அப்லோடு செய்யப்படும் ஸ்டேட்டஸை பேஸ்புக் ஸ்டோரியில் பகிரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் தனித் தனியாக ஸ்டேட்டஸ் அப்லோடு செய்வதை இந்த புதிய வசதி தவிர்க்கிறது.
அண்மையில் வந்த மற்ற அப்டேட்கள்:
வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. வழக்கமாக வாட்ஸ் அப்பில் புகைப்படம், வீடியோ ஆகியவற்றை மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்கும்படி இருந்தது- இதில் வீடியோக்களை அதிகபட்சமாக 30 விநாடிகள் மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும்.
இந்த வீடியோ ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்தில் தானாகவே டெலிட் ஆகிவிடும். அதே போல இனி வாய்ஸ் நோட்களையும் 30 நொடிகள் ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் புதிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அம்சம் நேற்று முதல் பயனர்களுக்கு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அத்துடன் இந்த வாய்ஸ் மெசேஜ் ஸ்டேட்டஸை யார் பார்க்க வேண்டம் என்பதையும் பயனர்கள் நிர்வகித்துக் கொள்ளும் வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.