WhatsApp | எல்லாமே சூப்பரு..! புத்தாண்டில் புது புது அப்டேட்ஸ் கொடுத்த வாட்ஸ் அப்.!
வாட்ஸ் அப்பில் 2022ம் ஆண்டுக்கான புதிய அப்டேட் விரைவில் வரவுள்ளது. ஒரு செய்தியை தனி நபர் அல்லது குழுக்களிடமிருந்து பெறும்போது அனுப்பியவர்களின் சுயவிவரப் படத்தை பார்க்கும் வகையில் இது அமையவுள்ளது.
பிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ் அப்பில் 2022ம் ஆண்டுக்கான புதிய அப்டேட் விரைவில் வர உள்ளது.
ஒரு செய்தியை தனி நபர் அல்லது குழுக்களிடமிருந்து பெறும்போது அனுப்பியவர்களின் சுயவிவரப் படத்தை Profile Picture பார்க்கும் வகையில் புதிய அப்டேட் வரவுள்ளது. சோதனை முயற்சியாக ஐஓஎஸ் பயன்பாட்டாளர்களுக்கு இந்த அப்டேட்டை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது.
ஸ்மார்ட் ஃபோன் யுகத்திற்கு பிறகு வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தாதவர்களே இல்லை என சொல்லலாம்.. உலக அளவில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள பல மெசேஜ் ஆப்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்களின் முதல் தேர்வு வாட்ஸ் ஆப்தான்.. காரணம் அது வடிவமைக்கப்பட்ட விதம் சாமானியர்களும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பவும், புகைப்படங்களைப் பரிமாறிக் கொள்ளவும் எளிதாக இருக்கிறது. அந்த வாட்ஸ் ஆப்பினை பயனர்கள் இன்னும் எளிதாக பயன்படுத்த அவ்வபோது வாட்ஸ் அப் நிறுவனம் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது தனிநபர் அல்லது, குரூப் மெசேஜ் வருகிறதெனில் தனிநபரின் பெயரைக் காட்டும் அல்லது இந்த குரூப்பில் இவர் செய்தி அனுப்பியுள்ளார் என நோடிஃபிகேஷன் காட்டும்.. இதில்தான் தற்போது மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது வாட்ஸ் ஆப். அப்டேட்டின் மூலம் தனிநபர் அல்லது குரூப் மெசேஜ் வருகிறது எனில் குறிப்பிட்ட நபர்களின் பெயருக்கு பதிலாக இனி புகைப்படம் நோடிஃபிகேஷனில் வரும்.
ட்விட்டர் போன்ற ஆப்களில் இந்த வசதி ஏற்கெனவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் முதன்முதலில் பீட்டா வெர்ஷன் 2.22.1.1 இல் கொண்டுவரப்பட்டது. இது iOS 15 இன் APIகளைப் பயன்படுத்தி வேலை செய்வதன் காரணமாக இந்த அம்சம் iOS 15 இல் உள்ள TestFlight பீட்டா புரோக்ராம் மூலம் 22.1.71 வெர்ஷன் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆப்பிள் ஐபோனின் ஐஓஎஸ் பயனர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த அப்டேட் குறித்த தகவலை Wabetainfo வெளியிட்டுள்ளது
📝 WhatsApp Messenger for iOS 22.1.71: what’s new?
— WABetaInfo (@WABetaInfo) January 5, 2022
• The TestFlight-reported version format has changed.
• New information in notifications is available to some iOS beta testers when someone mentions or replies to you in messages from group chats.https://t.co/bcUceXc1b3
இதன் அடுத்த அப்டேட்டாக குறிப்பிட்ட குழுவில் @என உங்களது பெயரைக் குறிப்பிட்டிருந்தால் அதுவும் இனி நோடிஃபிகேஷனில் வரும். அதேபோல நீங்கள் யாரையாவது @ என குறிப்பிட்டு அவர் அதற்கு பதில் அளித்திருந்தால், அவர் உங்களது மெசேஜுக்கு பதில் அளித்துவிட்டார் என்பதும் நோடிஃபிகேஷனில் வரும். சோதனை முயற்சியாக இந்த அப்டேட்டை வாட்ஸ் ஆப் வெளியிட்டுள்ளது.
இந்த அப்டேட்டிற்கு அடுத்தப்படியாக வாட்ஸ் ஆப் குழுக்களை (Whatsapp Groups) போலவே வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளை (Whatsapp Community) உருவாக்கவும் மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.