WhatsApp New Features | 'ஒருமுறை பார்த்ததும் பதிவு காணாமல் போகும்' - அப்டேட் அறிவித்த வாட்ஸ் அப்!
வரப்போகும் சில அப்டேட்கள் குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் சில தகவல்களை தெரிவித்துள்ளது.
உலகளவில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் தகவல்பரிமாற்ற செயலி வாட்ஸ் அப். புதுசு புதுசாக பயனர்களை கவரும் அப்டேட்களை கொடுத்து தம் செயலியையும் நிகழ்கால அப்டேட்டிலெயே வைத்திருக்கிறது அந்நிறுவனம். கவர்ச்சியானதாக மட்டுமே இல்லாமல் தனிநபர் தகவல் பாதுகாப்புக்காகவும், சமூக அக்கறையுடனும் பல்வேறு அப்டேட்கள் கொண்டுவரப்படுகின்றன.
அதிகமான போலிச்செய்திகள் பரவுகிறது என்ற குற்றச்சாட்டுகளை அடுத்து ஃபார்வேர்ட் செய்யும் முறைகளில் பல அப்டேட்களை வாட்ஸ் அப் கொண்டு வந்தது. இப்படியாக கொண்டு வரப்படும் அப்டேட்கள் உடனடியாக அனைவரும் பயன்பாட்டுக்கு வருவதில்லை. சோதனை முறையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு அதன் பின்னர் வரவேற்பை பொருத்தே அனைவருக்கும் பயன்பாட்டுக்கு வரும். சின்ன சின்ன அப்டேட்கள் நேரடியாகவும் கொண்டுவரப்படுகின்றன. அப்படியானசில அப்டேட்களை அறிவித்துள்ளது வாட்ஸ் அப். வரப்போகும் புதிய அப்டேட் குறித்து அறிவிப்பு வெளியிட்டது. வேறு யாரும் அல்ல, பேஸ்புக் ஓனர் மார்க் தான். வாட்ஸ் அப் அப்டேட் குறித்த தகவல்களை பின் தொடரும் அமைப்பான WABetaInfo அழைப்பை ஏற்று வாட்ஸ் அப்பின் சர்வதேச தலைவர் வில் சார்ட்டுடன், மார்க் வாட்ஸ் அப்பில் குரூப் சேட் செய்தார். அதில் அப்டேட் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதன்படி disappearing messages என்ற ஆப்ஷன் சேட்களில் வரவுள்ளது. இந்த ஆப்ஷனை ஆன் செய்துவிட்டால், நமது சேட்கள் 7 நாட்களில் தானாகவே மறைந்துவிடும். இது தனிநபர் சேட் அல்லது குரூப்களில் ஆன் செய்துகொள்ளலாம்.அதேபோல 'View Once' என்ற புதிய அப்டேட் வரவுள்ளது. ஒருவருக்கு ஒரு பதிவை அனுப்பி ‘View Once' ஆப்ஷன் கொடுத்தால் அவரால் அந்த பதிவை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். புகைப்படமோ, வீடியோவோ ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். அதில் இருந்து அவர்கள் வெளியே வந்ததும் அந்த பதிவு தானகவே மறைந்துவிடும்.
Redmi note 10s: எப்படியிருக்கு புதிய ரெட்மீ நோட் 10S; போட்டோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க!
பின்னர் அது தானாகவே அழிந்துவிடும். அதேபோல் முக்கியமாக multi-device support என்ற ஆப்ஷனை கொண்டு வர முடிவு செய்துள்ளது வாட்ஸ் அப். இதன்படி ஒரே நேரத்தில் 4 சாதனங்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம். எந்த ஒரு இடத்திலும் லாக் அவுட் செய்யாமல் 4 சாதனங்களிலும் பயன்படுத்த முடியும். இது குறித்து தெரிவித்துள்ள வாட்ஸ் அப், சற்று டெக்னிக்கலாக கஷ்டமான ஒரு அப்டேட் இது. இந்த அப்டேட்க்கு சில சவால்கள் உள்ளன. ஆனால் அனைத்து பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டு இந்த multi-device support அப்டேட் விரைவில் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயனாளர்களை கவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Will Cathcart and Mark Zuckerberg confirm to WABetaInfo 3 features to come on @WhatsApp! 😱@wcathcart https://t.co/sDm41MpQiG
— WABetaInfo (@WABetaInfo) June 3, 2021
This is an amazing story. Disappearing mode, view once and multi device features are coming soon for beta users!