Whatsapp New Feature: இனிமே.. அனுப்புன மெசேஜை எடிட் பண்ணலாம்..! புதுப்புது அப்டேட்டை வாரி வழங்கும் வாட்ஸ் -அப்..!
வாட்ஸ்-அப் செயலியில் அடுத்த அப்டேட்டாக அனுப்பிய குறுந்தகவலை எடிட் செய்யும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பயனாளர்களை கவரும் விதமாக வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட்டாக அனுப்பிய குறுந்தகவலை எடிட் செய்யும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வாட்ஸ்-அப் செயலி:
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் செயலியில் பயனாளர்களை கவரும் விதமாக அடுத்தடுத்து பல்வேறு அப்டேட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த அப்டேட்கள் வாட்ஸ்-அப் செயலியின் பயன்பாட்டையும், அதன் மூலம் செய்யக்கூடிய பயன்பாடுகளையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. பயனாளர்களை இழக்காமல் இருக்கவும், தொடர்ந்து புதிய பயனாளர்க:ஐ பெறவும் மெட்டா நிறுவனம் வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் மேலும் புதிய அப்டேட் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
புதிய அப்டேட்:
வாட்ஸ்-அப் செயலியில் ஏற்கனவே அனுப்பிய குறுந்தகவலை குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனுப்பிய குறுந்தகவலில் ஏதேனும் தவறு இருந்தால் அல்லது கூடுதல் தகவல் சேர்க்க வேண்டும் என்றால், பெறுநர் அதனை காணும் முன்பே குறிப்பிட்ட நேரத்திற்கு டெலிட் செய்து விடலாம். இந்நிலையில், தான் அனுப்பிய குறுந்தகவலை டெலிட் செய்யாமல் அதனை எடிட் செய்யும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
குறுந்தகவலை எடிட் செய்யும் வசதி:
Wabetainfo தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவலின் படி, பயனாளர்களை கவரும் விதமாக வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட்டாக அனுப்பிய குறுந்தகவலை எடிட் செய்யும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், குறுந்தகவலை அனுப்பிய 15 நிமிடத்திற்குள் அதனை எடிட் செய்து, ஏதேனும் ஒரு தகவலை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம். இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதியை நீக்குவதற்காக, இனி யாரும் ஒட்டுமொத்த குறுந்தகவலையும் நீக்க வேண்டிய அவசியம் இருக்காது என கூறப்படுகிறது.
கட்டுப்பாடு:
குறுந்தகவலை எடிட் செய்யும் இந்த வசதியானது புதிய வெர்ஷன் வாட்ஸ்-அப் செயலியில் மட்டுமே பயன்பாட்டுக்கு வரும் எனவும், இதன் மூலம் மீடியா கேப்ஷனை மாற்ற முடியாது, குறுந்தகவலை மட்டுமே எடிட் செய்ய முடியும் எனவும் கூறபடுகிறது. தற்போதைய சூழலில் இது ஆப்பிள் பயனாளர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் பீட்டா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் வெளியான அப்டேட்கள்:
ஆண்ட்ராய் பிக்சர் - இன் - பிக்சர் மோட் ஆப்ஷன் ஆப்பிள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆப்பிள் பயனாளர்களும் இனி வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் பேசிக்கொண்டே, மற்ற செயலிகளையும் வழக்கம்போல் பயன்படுத்தலாம். அதோடு, புகைப்படங்களில் தரத்தை மாற்றும் ஆப்பிள் பயனாளர்களுக்கான புதிய வசதியையும் மெட்டா நிறூவனம் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.