WhatsApp Update: அடேங்கப்பா இவ்வளவா? இனிமே இதுவும் புதுசு.. வாட்சப் கொடுத்த புது அப்டேட்..
வாட்ஸ் அப் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை வெளியிட்டு இருக்கிறது.
![WhatsApp Update: அடேங்கப்பா இவ்வளவா? இனிமே இதுவும் புதுசு.. வாட்சப் கொடுத்த புது அப்டேட்.. WhatsApp may soon let you share up to 2GB files here everything to know about new update WhatsApp Update: அடேங்கப்பா இவ்வளவா? இனிமே இதுவும் புதுசு.. வாட்சப் கொடுத்த புது அப்டேட்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/29/b5993a84593c3a43eb4201885c05e2bd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டிஜிட்டல் மையமாக மாறிவரும் இந்த உலகில் சமூகவலைதளங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளும் கார்ப்ரேட் நிறுவனங்களும் போட்டிப்போட்டி கொண்டு, அனுதினமும் ஆப்களை களமிறக்கி கொண்டிருக்கின்றன. இன்றைய ஜெனரேஷனில், கருத்துக்கு ட்விட்டர், நீள் பதிவுகளுக்கு ஃபேஸ்புக், போட்டோவிற்கு இன்ஸ்டாகிராம், நீயூஸ் ஷேரிங்கிற்கு வாட்ஸ் அப் உள்ளிட்ட ஆப்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாட்ஸ் அப் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அது என்னவென்றால், முன்னதாக வாட்ஸ் அப்பிலிருந்து ஏதாவது ஒரு ஃபைலை நாம் ட்ரான்ஸ்வர் செய்ய வேண்டும் என்றால் அந்த ஃபைல் 100 எம்பிக்குள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதுதான் தற்போதைய விதிமுறையாக உள்ள நிலையில், அந்த ஃபைல் சைஸின் அளவை 2 ஜிபியாக உயர்த்தியுள்ளதாக தெரிகிறது. இந்த ஆப்சன் ஆண்ராய்டு மற்றும் ஆப்பிள் என இரண்டு விதமான போன்களுக்கும் பொருந்தும். இந்த ஆப்ஷன் முதற்கட்டமாக அர்ஜெண்டினாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட குழு மட்டும் உபயோகப்படுத்தி பார்த்துக்கொள்ள கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆப்சன் விரைவில் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்ஸ்
முன்னதாக நேற்று வாட்ஸ் அப்பின் இணைநிறுவனமான இன்ஸ்டாகிராம் நேற்று தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வசதியை ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாக அறிவித்து இருந்தது. அந்த வசதியின் படி, இனி வாட்ஸ் அப்பில் பதிவிடும் ஸ்டோரிக்களுக்கு இமேஜ்களுடன் ரிப்ளே கொடுக்க முடியும். அதே போல வாய்ஸ் நோட்டிலும் இனி நம்மால் ரிப்ளை கொடுக்க முடியும். ஆண்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வசதியை அப்டேட் செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இது விரைவில் பயன்பாட்டு வர இருப்பதாக சொல்லப்படுகிறது.
#Instagram is working on the ability to reply to Stories with images 👀 pic.twitter.com/1mpaDstcZw
— Alessandro Paluzzi (@alex193a) March 26, 2022
#Instagram is working on the ability to reply to Stories with voice messages 👀 pic.twitter.com/6fQNSxB04e
— Alessandro Paluzzi (@alex193a) March 26, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)