மேலும் அறிய

WhatsApp New Feature : புதிய அப்டேட்ஸை அள்ளி இறைத்த வாட்ஸ் அப் : என்னென்ன மாற்றங்கள்; விவரம் இதோ!

WhatsApp New Feature : வாட்ஸ் அப்பில் விரைவில் வர இருக்கும் புதிய அப்டேட்கள்.

வாட்ஸ்-அப்:

மெடா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது.  அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி நிறுவனங்களிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அதில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு  வருகின்றன. குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப்  தொடர்ந்து நீடிப்பதற்கு மெடா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட்களை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 கெப்ட் மெசேஜஸ் வசதி (Kept Messages feature)

வாட்ஸப்பில் டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் மோட் செயலில் இருக்கும்போது தகவல்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு காணாமல் போவதை தடுக்கும் விதத்தில் கெப்ட் மெசேஜ் என்ற வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. ஆண்ட்ராய்ட்-இன் Android 2.23.4.10 வர்ஷன் அப்டேட்டில் வாட்ஸப் பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த வசதி கிடைக்கும். மற்றவர்களுக்கு இந்த வசதி பின்னர் வழங்கப்படும். 

குறிப்பாக வாட்ஸ்-அப் குழுவில் இந்த புதிய அப்டேட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, வாட்ஸப் குழுவில் டிஸ்ஸப்பியரிங் மேசேஜ் மோட் செயலில் இருந்தாலும், கெப்ட் மெசேஜ் -ஐ எனேபிள் செய்யும்போது அதிலுள்ள மெசேஜ் காணாமல் போகாது. 

வாய்ஸ் நோட்:

நீளமான குறுஞ்செய்திகளை தட்டச்சு செய்ய சிரமப்படும் பயனாளர்கள், குறிப்பிட்ட தகவலை பேசி வாய்ஸ்-நோட் ஆக ரிகர்ட் செய்து பகிரும் அம்சம் உள்ளது. ஆனால், அந்த நீளமான வாய்ஸ் நோட்டை கேட்க விரும்பாதவர்கள் உண்டு. அதோடு, ஹெட்-செட் இன்றி பொது இடங்களுக்கு சென்றபோது வாய்ஸ்-நோட்டை கேட்க முடியாமல் சிரமப்படுவதும், தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பான வாய்ஸ் நோட்டை பொதுவெளியில் கேட்க முடியாத சூழலும் உண்டு. இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் ஒரு புதிய அப்டேட்டைத்தான் வாட்ஸ்-அப் செயலி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 

டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சம்:

வாய்ஸ் நோட்டை கேட்பதில் உள்ள சிக்கலை தீர்க்கும் வகையில், டிரான்ஸ்கிரிப்ஷன் எனும் புதிய அப்டேட்டை வாட்ஸ்-அப் செயலி வழங்க உள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட வாய்ஸ்-நோட்டை மொத்தமாகவே டெக்ஸ்ட் அதாவது எழுத்தப்பட்ட உரையாக மாற்ற முடியும் என கூறப்படுகிறது. இந்த அப்டேட் தற்போது ஆராய்ச்சியில் இருப்பதகாவும், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.

டாக்குமெண்ட் கேப்சன் (Document caption)

வாட்ஸப் பீட்டா பயனாளர்களுக்கு புதிய அப்டேட்டாக 3 கி.பி. வரை டாக்குமெண்ட்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஷெட்யூல் செய்வது எப்படி?

வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள நபர்களுக்கு செட்யூல் செய்து அழைப்பு மேற்கொள்ளும் வகையில் புதிய வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு வாட்ஸ்-அப் செயலியில் கால் பட்டனை அழுத்தியதும் திரையில் ஒரு ஆப்சன் தோன்றும். அதில், அழைப்புக்கான தலைப்பு, தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை பதிவிட்டு, கிரியேட் பட்டனை அழுத்த வேண்டும். அதைதொடர்ந்து, குரூப்பில் உள்ள நபர்களுக்கு அழைப்பு செட்யூல் செய்யப்பட்டது மற்றும் அழைப்பு தொடங்கியதற்கான நோட்டிபிகேஷன் தோன்றும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.  திட்டமிட்டு அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

கால் - ஷார்ட் கட்

முன்னதாக, எளிய முறையில் அழைப்பு மேற்கொள்ளும் வசதியும் வாட்ஸ்-அப் செயலியில் அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு, வாட்ஸ்-அப் செயலிக்குள் சென்று காண்டேக்ட்ஸ் பட்டியலை தேர்வு செய்து, அதில் குறிப்பிட்ட எண்ணை தொடுவதன் மூலம், அதற்கு ஷார்ட்-கட் வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம், பயனாளர் அடிக்கடி தொடர்புகொள்ளும் நபருக்கு, எளிய முறையில் அழைப்பு மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் வெளிவந்த அப்டேட்:

புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துகளை போன்று, வாய்ஸ்-நோட்ஸ்-ஐயும் ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய அப்டேட் அண்மையில் வெளியானது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget