WhatsApp Update: என்னது ஸ்டேடஸ்ல Tag செய்யும் வசதியா? வாட்ஸ் அப் கொடுத்த புதிய அப்டேட்!
WhatsApp Update: வாட்ஸ் அப் வழங்கப்பட்டுள்ள புதிய வசதி பற்றி இங்கே காணலாம்.
வாட்ஸ் அப் (WhatsApp) ஸ்டேடஸ்- ல் Tag செய்யும் வசதி, சாட் தீம் உள்ளிட்ட புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மெட்டா நிறுவனம் தனது பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வபோது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் உள்ளது போலவே வாட்ஸ் அப் செயலியிலும் சில வசதியை அறிமுகப்படுத்தி வருகிறது மெட்டா. தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் அனுபவத்தை சிறப்பாக செய்ய வேண்டிய அப்டேட்களை வழங்கி வருகிறது.
வாட்ஸ் ஸ்டேடஸ் டேக் செய்யும் வசதி:
வாட்ஸ் அப் சமீபத்தில் ’லைக்’ செய்யும் வசதியை அறிமுகம் செய்திருந்தது. க்ரீன் நிற ஹார்ட் ஸ்டேடஸ் பார்த்து லைக் செய்யும்போது சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டிஃபை ஆகும். ஒரு லைக் மூலம் ஸ்டேடஸ் விருப்பத்தினை தெரிவிக்கலாம்.
இப்போது ஸ்டேடஸில் Tag செய்யும் வசதி உலக அளவில் அறிமுகமாகி வருகிறது. வாட்ஸ் அப்பின் புதிய வர்ஷனில் இந்த அப்டேட் இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் ஸ்டேடஸ் வைக்கும்போது குறிப்பிட்ட நபர் அதை மிஸ் செய்துவிட கூடாது என்பதற்காக அவரை டேக் செய்யலாம். இது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போல இல்லாமல், நீங்கள் யாரை டேக் செய்கிறீர்களோ அவர்களுக்கு மட்டுமே டேக் செய்தது தெரியும். ஆனால், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் டேக் செய்தால் பொதுவாக இருக்கும். வாட்ஸ் அப்பில் இனி வரும் காலங்களில் ஸ்டேடஸ் தொடர்பான புதிய அப்டேட்கள் வெளிவர இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
📝 WhatsApp beta for Android 2.24.20.12: what's new?
— WABetaInfo (@WABetaInfo) September 18, 2024
WhatsApp is working on a new default chat theme feature with multiple design options, and it will be available in a future update!https://t.co/EBdXbL4BvH pic.twitter.com/j4kf18WZP4
எப்படி பயன்படுத்துவது?
வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் வைக்கும்போது, “@” என்ற குறிப்பிட்டு உங்களது கான்டெக்ட்டை குறிப்பிடலாம்.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் புதிய வர்சனில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
வீடியோ கால் வசதியில் ஃபில்டர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வீடியோ காலில் Background மாற்றி கொள்ளலாம். ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வீடியோ கால் பயன்படுத்தும்போது அதன் Background மாற்றிகொள்ள முடியும். இப்போது இந்த வசதி வாட்ஸ் அப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி டீம்ஸ் (Teams), கூகுள் மீட் (Google Meet) ஆகிய ப்ளாட்ஃபாம்களில் இந்த வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த அப்டேட் இன்னும் சில நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீடியோ காலில் இனி உங்களுக்குப் பிடித்த எஃபக்ட்கள், background மாற்றிக்கொள்ளலாம். வீடியோ கால் ஸ்க்ரினில் “Magic Wand” ஐகான் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் சாட் செட்டிங்கில் ஸ்கிரீன் தீம் வசதி அறிமுகமாக உள்ளது. விரைவில் இது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாகிரம், ஃபேஸ்புக் மெசெஞ்சரில் உள்ளதுபோல வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.