WhatsApp Update: பழைய மெசேஜ்களை தேட இனி ஸ்க்ரோல் செய்ய வேண்டாம்; தேதியே போதும்.. இதை படிங்க..
WhatsApp Update: வாட்ஸ் அப்பில் வந்துள்ள புதிய அப்டேட்டால் இனி பழைய மேசேஜ்களை எடுக்க இனி ஸ்க்ரோல் செய்ய வேண்டியதில்லை என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
WhatsApp Update: வாட்ஸ் அப்பில் வந்துள்ள புதிய அப்டேட்டால் இனி பழைய மேசேஜ்களை எடுக்க இனி ஸ்க்ரோல் செய்ய வேண்டியதில்லை என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்களால் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப், தனது பயனர்களுக்கு புதிய அப்டேட்களை வழங்குவதில் தீவிரமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த செயலி, பயனாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதே சமயத்தில் வாட்ஸ் அப்பை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்துவதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாட்ஸ்-அப் வாயிலாக தவறான செய்திகளை அனுப்புவது, ஸ்பாம் செய்வது, பயனாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு, அந்நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களது கணக்கை முடக்கவோ அல்லது சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது இந்நிலையில் விரைவில் பல சூப்பர் டூப்பர் அப்டேட்களை வாட்ஸ் அப் கொண்டு வரவுள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மிகவும் அற்புதமான அப்டேட்டை கொண்டுவந்துள்ளது.
வாட்ஸ் அப்பில் பழைய மெசேஜ்களை தேடி எடுக்க நாம் எல்லாம், மொபைலை போட்டு ஸ்க்ரோல் செய்கிறோம். வாட்ஸ் அப்பில் வந்துள்ள புதிய அப்டேட்டால் நாம் இனி ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. புதிதாக அப்டேட் கொடுக்கப்படவுள்ள வாட்ஸ் அப்பில் குழு அல்லது பர்ஷ்னல் ஷேட்டில் கொடுக்கப்படவுள்ள சர்ச் பாக்ஸில் தேதியை குறிப்பிட்டு தேடினால், அந்த தேதிக்குரிய மெசேஜ்கள் ஸ்கிரீனில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் WhatsApp beta iOS 22.0.19.73-வானது ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வாட்ஸ் அப் குழுவில் உள்ள தேவையற்ற மெசேஜ்களை குழுவின் அட்மின் நீக்கி, குழு மிகவும் இயல்பாக இயங்கவைக்க இந்த அப்டேட் உதவியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, அறிமுகப்படுத்தப்பட்ட சில அப்டேட்கள்.
Past group participants:
இதுவரை வாட்ஸ் அப் குரூபில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று காண முடியும். இந்நிலையில், விரைவில், வாட்ஸ் அப் குழுவிலிருந்து யாராவது விலகி இருந்தார் அவர்கள் பற்றிய தகவலை 60 நாட்களுக்கு பெறும் வகையில் புதிய அப்டேட் வர இருக்கிறது. இதன்மூலம், வாட்ஸ் அப் குழுவில் இருந்து யாரெல்லாம் லெஃப்ட் ஆகியிருந்தால் அவர்களை கண்டுகொள்ள முடியும்.
Online:
தற்போது நாம் ஆன்லைனில் இருந்தால் நம் நம்பரை சேவ் செய்திருக்கும் நபர்களுக்கு online எனக் காட்டும். இது வசதிதான் என்றாலும் சிலரை நம்மால் தவிர்க்க முடியாது. ஆன்லைனைப் பார்த்து நமக்கு சாட் செய்வார்கள். அந்த சிக்கலை சரிசெய்ய தற்போது அப்டேட் கொண்டு வருகிறது வாட்ஸ் அப். அதன்படி ஆன்லைன் என்பதை சிலருக்கோ அல்லது யாருக்குமே காட்டாமல் இருக்கலாம் என்றும் அந்த அப்டேட்டுக்கான சோதனை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல நாம் ஒருவருக்கு அனுப்பிய செய்தியை வேண்டுமானால் தற்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் டெலிட் மட்டுமே செய்ய முடியும். அதில் ஒரு அப்டேட்டாக, அனுப்பிய செய்தியை எடிட் செய்யும் வசதியும் விரைவில் வரும் எனத் தெரிகிறது. இதெல்லாம் தற்போது சோதனை முறையில் இருப்பதால் விரைவில் பீட்டா வெர்ஷனுக்கு கொண்டு வரப்பட்டு அது வரவேற்பை பெற்றால்தான் அனைவருக்கும் கிடைக்கும்.