Whatsapp Update | 'Delete for everyone' ஆப்ஷனை இனிமே இப்படி யூஸ் பண்ணிக்கலாம்.. எப்போ வேணும்னாலும்..
வாட்ஸ்அப் விரைவில் அதன் ‘Delete for Everyone’ அம்சத்தில் மாற்றங்களைச் செய்யும் என்று தெரிகிறது. WaBetaInfo-இன் சமீபத்திய அறிக்கையில் நிறுவனம், அம்சத்தை கால வரையின்றி நீட்டிக்கப் போவதாக தெரிவிக்கிறது.
நாம் அனுப்பும் சில வாட்ஸ்அப் செய்திகளை டெலிட் செய்வதற்கு பல காரணங்கள் இருக்கும். சிலர் தவறுதலாக செய்திகளை பிறருக்கு அனுப்பியிருக்கலாம். இல்லையெனில், வேறு ஏதேனும் காரணத்தினால் செய்திகளை டெலிட் செய்து விடுவர். அதற்காக ‘Delete for Everyone’ அம்சம் முதலில் 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது வாட்சப் அதன் பயனர்களுக்கு வழங்கும் மிகவும் பயனுள்ள மற்றும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். தற்செயலாக ஒரு குரூப் அல்லது தனிப்பட்ட சாட்டிற்கு தவறான செய்தியை அனுப்பியிருந்தால், இந்த விருப்பம் அந்த தவறுதலான மெஸேஜை யாரும் காணாமல் டெலிட் செய்ய உதவி அவரை சங்கடத்திலிருந்து காப்பாற்றுகிறது. வாட்ஸ்அப் முதலில் ஏழு நிமிட கால வரம்புடன் இந்த அம்சத்தை வழங்கியது மற்றும் சில மாதங்களுக்குப் பிறகு, அது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டது. WABetaInfo பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்களின்படி, நிறுவனம் இந்த அம்சத்தின் கால வரம்பை காலவரையின்றி மாற்றப் போவதாக இப்போது தெரிகிறது.
வாட்ஸ்அப்பின் v2.21.23.1 ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் இந்த புதிய மேம்பாடு கண்டறியப்பட்டதாக மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரம் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் இன்னும் வளர்ச்சியில் உள்ளது என்றும், அனைத்து பீட்டா சோதனையாளர்களுக்கும் இந்த புதிய அப்டேட் கிடைக்கும் வரை பயனர்கள் இதைப் பற்றி உற்சாகமடைய வேண்டாம் என்றும் அறிக்கை குறிப்பிட்டது. இந்த அம்சம் பயனர்களுக்கு எப்போது வெளியிடப்படும் என்பதை மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரம் உறுதிப்படுத்தவில்லை. தற்போது, வாட்ஸ்அப் பயனர்கள் மெசேஜிங் சாட்டில் தனிப்பட்ட மற்றும் குரூப் சாட்களில் இருந்து செய்திகளை நீக்க ஒரு மணிநேரம் மட்டுமே கிடைக்கிறது. ஒரு செய்தியை நீக்கியதும், பயன்பாடு சாட் சாளரத்தில் ஒரு அறிவிப்பைக் காண்பிக்கும், அதில் “This message was deleted” என்று கூறுகிறது. இருப்பினும், நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளையும் சரிபார்க்க வழிகள் உள்ளன.
டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை மீண்டும் மீட்டெடுக்க யூசர்களை அனுமதிக்கும் Notisave என்ற செயலி Google Play ஸ்டோரில் கிடைக்கிறது. சுவாரஸ்யமாக இந்த செயலி வாட்ஸ்அப்பில் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீட்டெடுக்க மட்டும் உதவாது. வாட்ஸ்அப்பில் டெலிட் ஆன புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் GIF களை மீட்டெடுக்கவும் உதவுகிறது.தவிர, வாட்ஸ்அப்பின் iOS பதிப்பு புதிய வீடியோ பிளேபேக் இடைமுகத்தைப் பெறுகிறது என்றும் WABetaInfo பரிந்துரைத்தது. இதன் மூலம், ஒருவர் முழுத்திரையில் வீடியோவை இடைநிறுத்தலாம் அல்லது இயக்கலாம் அல்லது பிக்சர்-இன்-பிக்சர் (PIP) சாளரத்தை மூடலாம். பயன்பாட்டின் v2.21.220.15 iOS பீட்டா பதிப்பைப் பயன்படுத்தும் சிலருக்கு இந்த அம்சம் ஏற்கனவே தெரியும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்டது.