Whatsapp Avatar: இனி வாட்ஸப்பிலும் அனிமேதன் அவதார்கள்தான்.. விரைவில் வரும் அப்டேட்.. எப்படின்னு கேக்குறீங்களா?
இனி வாட்ஸப்பிலும் அனிமேட்டெட் அவதார்கள்; இது குறித்த அப்டேட்கள் மிக விரைவில் வரவுள்ளதாக மெட்டா நிறுவனத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இனி வாட்ஸப்பிலும் அனிமேட்டெட் அவதார்கள்; இது குறித்த அப்டேட்கள் மிக விரைவில் வரவுள்ளதாக மெட்டா நிறுவனத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மெட்டா நிறுவனம் சமூக வலைதளங்களான வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், மெசன்ஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராமினை நடத்தி வருகிறது. தற்போதைய தொழில்நுட்ப உலகிற்கு ஏற்றவாறு அடிக்கடி தனது நிறூவனம் நடத்தி வரும் சமூக வலைதளங்களில் அதிரடியான அப்டேட்களை கொடுத்து வருகிறது. தற்போது புதிய அப்டேட் ஒன்றினை வாட்ஸ் ஆப்பில் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசன்ஞரில் மெட்டா நிறுவனம் அனிமேட்டெட் அவதார்களை உரையாடலின் போது பயன்படுத்தும் முறையினை கொண்டுள்ளது. தற்போது வாட்ஸ் ஆப்பிலும் இந்த அனிமேட்டெட் அவதார் முறையினை அப்டேட்டாக கொடுக்கவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மக்களில் பெரும்பாலான மக்கள் வாட்ஸ் ஆப் சமூக வலைதளத்தினை பயன்படுத்தி வருகின்றனர். ப்ளே ஸ்டோரில் உள்ள தகவலின் படி, மொத்தம் 5 பில்லியனுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருவதும், அதற்கான ப்ர்ர்ட்டிங் என்பது 4.2/5 ஆகவும் உள்ளது. இது தவிர ஐ ஸ்டோரில் டவுன்லோடு செய்து பயன்படுத்துபவர்கள் என்பது தனிக்கணக்கு. வாட்ஸ் ஆப் தொடங்கப்பட்ட காலம் தொடங்கி, இன்றுவரை தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகளைக் கொடுத்து அதன், பயனாளர்களை தக்கவைப்பதுடன், திருப்தி படுத்தியும் வருகிறது.
அன்மையில் அதிரடியான அப்டேட்டுகளை வாட்ஸ் ஆப்பில் கொடுத்து வந்த மெட்டா நிறுவனம் தற்போது, மீண்டும் ஒரு அதிரடியான அப்டேட்டினை கொடுக்கவுள்ளது. ஏற்கனவே வாட்ஸ் ஆப் உரையாடலின் போது கிஃப், எமோஜி, ஸ்டிக்கர் என பகிர்ந்து கொண்டு இருக்கையில், தற்போது அனிமேட்டெட் அவதார்களையும் பயன்படுத்தும் படியான அப்டேட்டையும் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் நம்முடைய அனிமேட்டெட் அவதாரினை நாமே வடிவமத்துக்கொள்ளவும் முடியும்.
அனிமேட்டேட் அவதார்கள் மற்றும் 3D அனிமேட்டெட் அவதார்களை மற்ற சமூக வலைதளங்களில் உள்ளது போல் வாட்ஸ் ஆப்பில் அறிமுகம் செய்வதால், விடியோ கால் பேசும் போதும் நமக்கான அனிமேட்டேட் அவதார்களை பயன்படுத்தும் முறையில் அப்டேட் கொடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மொபைலில் கேமராவை நாம் ஆப் செய்தாலும் நம்முடைய அனிமேட்டெட் அவதாரினை டி.பி.க்கு பதிலாக பயன்படுத்தும்படியாக அப்டேட் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்