"EARBUDS" வாங்க போறீங்களா? இதை படிச்சுட்டு போங்க!
குறிப்பிட்ட பிராண்ட் இயர்பட்ஸ்தான் சிறந்தது மற்றவை எல்லாம் வீண் என்ற எண்ணத்தை முதலில் தூக்கிப்போட வேண்டும். இயர் பட்ஸின் தரத்தினை பிராண்டின் மூலம் நிர்ணயிக்க கூடாது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்கள் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மொபைல் போன்கள் ஏற்படுத்திய புரட்சி என்பது வியக்கத்தக்கது. கடந்த 10 வருடங்களில் அவற்றின் வளர்ச்சி , உலகில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையில்லை.
இது ஒரு புறம் இருக்க மொபைல்போன்களில் பயன்படுத்துவதற்கான ஹெட்போன் உள்ளிட்ட சிறிய சாதனங்களில் புதுமையை புகுத்தி அதை சந்தைப்படுத்தும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அப்படி தொழில்நுட்ப புதுமையில் உருவான "இயர் பட்ஸ்" குறித்தும், அதனை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய இயர்பட்ஸுக்கு பிறகுதான் , பலருக்கும் "இயர் பட்ஸ்" குறித்த அறிமுகம் கிடைத்தது என்றாலும் கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இயர் பட்ஸ் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் விளைவாக சந்தையில் தற்போது 500 ரூபாய் முதல் 50000 ரூபாய் வரையிலும் இயர் பட்ஸ் விற்பனை செய்யப்ப்டுகிறது.
"இயர் பட்ஸ்" பொறுத்தவரையில் ஒயருடன் இணைக்கப்பட்டிருப்பது இல்லை , எனவே அது நேரடியாக wireless technology மூலம் மொபைல்போன், லேப்டாப் போன்ற சாதனங்களுடன் இணைக்கப்பட்டு, ரேடியோ சிக்னல் அல்லது ஆடியோ சிக்னலை சாதனங்களுக்கு கடத்துவதன் மூலம் செயல்படுகிறது.
குறிப்பிட்ட பிராண்ட் இயர்பட்ஸ்தான் சிறந்தது மற்றவை எல்லாம் வீண் என்ற எண்ணத்தை முதலில் தூக்கிப்போட வேண்டும். இயர் பட்ஸின் தரத்தினை பிராண்டின் மூலம் நிர்ணயிக்க கூடாது. 5 ஆயிரம் ரூபாக்கு அதிகமாக வாங்கும் இயர் பட்ஸ் உங்களோடு அதிக நாட்கள் பயணிக்கும் ஆற்றலோடு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இயர்பட் வாங்குவதற்கு முன் செய்ய வேண்டியவை:
இயர் பட்ஸ் வாங்குவதற்கு முன் அதன் டிசைன் உங்களுக்கு பொறுத்தமானதாக உள்ளதா மற்றும் உங்கள் காதுகளில் பொருந்துவதாக உள்ளதாக என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் வாங்குபவராக இருந்தால் , ஆர்டர் செய்த "இயர்பட்டின்" UNBOXING வீடியோவை எடுப்பது நல்லது. அது தரம் குறைந்த இயர்பட்டினை மாற்றிக்கொள்ள ஏதுவாக இருக்கும். மேலும் ஆன்லைனிலோ அல்லது நேரிலோ வாங்குவதற்கு முன்பு அதன் சிறப்பம்சங்கள் குறித்து தெளிவாக படிக்க வேண்டும்.
முதலில் Impedance எனப்படும் மின்தடுப்பு அதிகமாக இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும் ஏனெனில் , Impedance அதிகமாக இருந்தால் உங்கள் " இயர் பட் " அதிக பேட்டரி சக்தியை எடுத்துக்கொள்ளாது.
Sensitivity அதாவது உங்கள் இயர்பட்டின் SPF LEVEL -இன் அளவினை பரிசோதித்துக்கொள்ளுங்கள், ஏனெனில் அதிக சத்தம் உங்கள் காதுகளை பாதிக்கலாம்
அதிர்வெண் அளவீட்டை சோதிக்க வேண்டும், இது நீங்கள் கேட்கும் பாடலை பொறுத்தது, நீங்கள் அதிக பீட் கொண்ட பாடலை கேட்பவராக இருந்தால் அதிர்வெண் அளவு குறைவாக இருக்கும் இயர் பட்ஸை பயன்படுத்துவது நல்லது.
நீங்கள் உடற்பயிற்சி செய்யும் பொழுது அதனை பயன்படுத்தப் போவதாக இருந்தால் அது Sweat Resistant என்பதை உறுதி செய்யவும்.
noise cancelling இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் இல்லை என்றால் நீங்கள் பேசும் பொழுது உங்கள் குரலோடு சேர்த்து, சுற்றுப்புற சத்தமும் கேட்கும்.
ஒருமுறை பேட்டரி சார்ஜ் செய்தால் எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள், இதற்கு நீங்கள் முன்பே இயர்பட் பயன்படுத்துபவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளலாம்.
பராமரிப்பு :
ஒரு இயர் பட் வாங்கியவுடன் அதனை , ஹெட்போனினை போல் அங்கும் இங்கும் தூக்கி வீசாமல், அதற்காக கொடுக்கப்பட்ட பெட்டியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
குறைந்த விலையில் வாங்கியவராக இருந்தால் இயர்பட்டையும் ஹெட்போனையும் மாற்றி மாற்றி பயன்படுத்துவதால் அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம்.